ஈ.பி.டி.பியின் தொழிலாளர் தின நிகழ்வுகள் பருத்தித்துறையில் – யாழ்ப்பாணத்திலிருந்து வாகனப் பேரணிக்கும் ஏற்பாடு!
Tuesday, April 30th, 2024நாளை உலக தொழிலாளர் தினமாகும். இந்த தொழிலாளர் தினத்தினை முன்னிட்டு ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி நாளையதினம் (01) தமது மே தினக் நிகழ்வுகளை பருத்தித்துறையில் பிரமாண்டமான முறையில் ஏற்பாடு செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது
இது தொடர்பில் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் ஊடக பேச்சாளர் ஐயாத்துரை சிறீரங்கேஸ்வரன் கூறுகையில் –
எமது கட்சியின் இவ்வாண்டுக்கான தொழிலாளர் தினம் பருத்தித்துறை நகரில் பருத்தித்துறை பல நோக்கு கூட்டுறவு சங்க கேட்போர் கூடத்தில் நடைபெற ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
இதேநேரம் எமது மேதின நிகழ்வுகளில் ஒரு அங்கமாக யாழ்ப்பாணத்திலுள்ள எமது கட்சியின் தலைமை அலுவலக முன்றலிலிருந்து வாகனப் பேரணி ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இப்பேரணியானது யாழ்ப்பாணம் – பருத்தித்துறை பிரதான வீதி வழியாக சென்று பருத்தித்துறை நகரை அடையவுள்ளது.
இதன்பின்னர் பலநோக்கு கூட்டறவு சங்க கேட்போர் கூடத்தில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளள நிகழ்வுகள் நடைபெறும்
குறிப்பாக தொழிற் சங்ககங்களின் பிரதிநதிதிகள் பொது அமைப்புகளின் பிரதிநிதிகள் உள்ளிட்ட பலர் இந்நிகழ்வில் தொழிலாளர் உரிமைகளை வலியுறுத்தி சிறப்புரைகளாற்றவுள்ளனர் என்றும் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது
000
Related posts:
|
|