ஈ.பி.டி.பியின் உறுப்பினர் ஐங்கரன் முன்மொழிவு- வலி.கிழக்கு பிரதேச சபையால் கர்ப்பிணி பெண்கள் பாலூட்டும் தாய்மாருக்கு சத்துணவு வழங்கிவைப்பு!

Thursday, September 22nd, 2022

வலிகாமம் கிழக்கு பிரதேச சபையின் ஆழுகைக்குள்  வாழும்
கர்ப்பிணி பெண்கள் மற்றும் பாலூட்டும் தாய்மாருக்கு சத்துணவு வழங்கிநடவடிக்கை எடுக்க வேண்டும் என ஈ.பி.டி.பியின் வலி கிழக்கு நிர்வாக பொறுப்பாளரும் குறித்த சபையின் உறுப்பினருமான இராமநாதன் ஐங்கரன் முன்வைத்த கோரிக்கையை அடுத்து குறித்த பகுதியில் வாழும் கர்ப்பிணி பெண்கள் பாலூட்டும் தாய்மாருக்கு சத்துணவு வழங்கி வைக்கப்பட்டுள்ளது.

முன்பதாக வலிகாமம் கிழக்கு பிரதேச சபையின்  மாதாந்த சபை அமர்வின் போது பிரதேசத்தில் உள்ள கர்ப்பிணிப் பெண்கள் மற்றும் பாலூட்டும் தாய்மார்கள் ஆகியோருக்கான சத்துணவு வழங்க வேண்டும் என்ற ஒரு கோரிக்கையை உறுப்பினர் ஐங்கரன்  முன்வைத்திருந்தார்.

இதனை ஏற்றுக்கொண்ட சபை வரவு செலவு திட்டத்தில் நலநோம்புதல் விடயத்திற்காக ஒதுக்கப்பட்ட நிதியில் இருந்து உரிய அனுமதி பெற்று இத் திட்டத்தை செயல்படுத்துவது எனவும் இதன் பிரகாரம் ஒவ்வொருவருக்கும் தலா 5,000 ரூபாய் பெறுமதியான சத்து உணவுகளை வழங்குவது எனவும் தீர்மானித்திருந்தது.
மேலும் சத்துணவு வழங்கப்பட வேண்டிய பயனாளிகள் மற்றும் சத்துணவு  தொடர்பான விவரங்களை கோப்பாய் வைத்திய சுகாதார அதிகாரிகளிடமிருந்து தரவுகளை பெற்றுக்கொள்வதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

இந்த முன்மொழிவானது உறுப்பினர் ஐங்கரனால் முன்மொழியப்பட்ட நிலையில் உப தவிசாளர்  மகேந்திரலிங்கம் கபிலனால் வழிமொழியப்பட்டது .

இந்நிலையில் இன்றையதினம் (22/09/2022) கோப்பாய் மத்தி  J/261 கிராம சேவையாளர் பிரிவில் குறித்த உதவி வழங்கி வைக்கப்பட்டுள்ளது.

குறித்த  நிகழ்வில் ஈ.பி.டி.பியின் வலி கிழக்கு நிர்வாக பொறுப்பாளரும் குறித்த சபையின் உறுப்பினருமான இராமநாதன் ஐங்கரன், கிராம சேவையாளர், பிரதேச சபையின் வட்டார அபிவிருத்தி உத்தியோகத்தர், குடும்ப நல உத்தியோகத்தர், வட்டார உறுப்பினர் சுப்பிரமணியம் தயாளண்டேஸ்வரன்  ஆகியோர் கலந்து கொண்டு வழங்கி வைத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

……

Related posts:

தேசிய மட்டத்தில் கொரோனா வைரஸை கட்டுப்படுத்துவதற்கு பாதுகாப்பாக இருப்போம் டிஜிட்டல் தீர்வை அறிமுகப்பட...
குடாநாட்டு மக்களிடம் யாழ். போதனா வைத்தியசாலையின் பதில் பணிப்பாளர் விடுத்துள்ள அவசர கோரிக்கை!
வெளிநாட்டில் உள்ள இலங்கை பணியாளர்கள் 100,000 டொலர்களை இலங்கைக்கு அனுப்பினால் வாகனத்தை இறக்குமதி செய்...