ஈஸ்டர் தாக்குதல் விவகாரம் குறித்து அடுத்த கட்ட நடவடிக்கைக்குத் தயார் – பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர்!

Tuesday, March 9th, 2021

ஈஸ்டர் தாக்குதல் குறித்து சட்டமா அதிபர் திணைக்களத்தின் நடவடிக்கையை தொடர்ந்து அடுத்த கட்ட நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும் என பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் சமல் ராஜபக்க்ஷ தெரிவித்துள்ளார்.

அத்துடன் மாவனெல்ல சம்பவம் இடம்பெற்ற போதே உரிய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டிருந்தால் ஈஸ்டர் தாக்குதல் இடம்பெற்றிருக்காது என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

அதேநேரம் 2015 ஆம் ஆண்டு முதல் ஈஸ்டர் தாக்குதல் வரை இடம்பெற்ற பல சம்பவங்கள் தொடர்பாக அழுத்தங்கள் பிரயோகிக்கப்பட்டதால் பொலிஸாரினால் எந்த நடவடிக்கையும் முன்னெடுக்க முடியாமல் போனது என அவர் சுட்டிக்காட்டினார்.

3 நாள் விவாதத்தை எதிர்க்கட்சி கோரியிருந்தத நிலையில் ஜனாதிபதி ஆணைக்குழுவின் அறிக்கை மீது நாடாளுமன்றில் இன்று 10 ஆம் திகதி விவாதம் இடம்பெறுகின்றது.

இந்நிலையில் தாக்குதல் குறித்து ஏதேனும் விபரங்கள் தெரிந்திருந்தால் அவற்றினை ஜனாதிபதி ஆணைக்குழுவில் தெரிவித்திருக்கலாம் என்றும் தேவையற்ற கருத்துக்களை கூறிக் கொண்டிருப்பது பிரயோசனமற்றது என்றும் அவர் மேலும் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Related posts: