ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல் தொடர்பான முழுப் பொறுப்பையும் கடந்த அரசாங்கமே பொறுப்பேற்க வேண்டும் – ஜனாதிபதி தெரிவிப்பு!

Saturday, March 6th, 2021

ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல் தொடர்பான முழுப் பொறுப்பையும் கடந்த அரசாங்கமே பொறுப்பேற்க வேண்டும் என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

இன்று சனிக்கிழமை இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு கருத்து தெரிவித்த அவர், ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பான ஜனாதிபதி ஆணைக்குழுவின் அறிக்கை மிகவும் தெளிவானது எனவும் கூறியுள்ளார்.

அத்துடன் மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான அரசாங்கத்தில் தேசிய பாதுகாப்புக்கு வழங்கப்பட்டிருந்த முக்கியத்துவத்தை கடந்த நல்லாட்சி அரசாங்கம் புறக்கணித்தமையின் ஊடாகவே இத்தாக்குதல் இடம்பெற்றதாவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இந்நிலையில், குறித்த தாக்குதலுக்கும் தற்போதைய அரசாங்கத்திற்கும் எந்தவித பொறுப்பும் இல்லை என குறிப்பிட்ட ஜனாதிபதி கோட்டபய ராஜபக்ச தாக்குதலுக்கு பின்னணியில் இருப்பவர்களை தண்டிப்பதே தற்போதைய அரசாங்கத்தின் நோக்கம் எனவும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

000

Related posts: