ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் தேசிய மாநாட்டின் தீவக பிரதேசத்திற்கான முன்னமர்வு

Thursday, April 14th, 2016

ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் தீவக பகுதிகளுக்கான பிரதேச மாநாட்டு முன்னமர்வு எதிர்வரும் 17 ஆம் திகதி காலை 10 மணிக்கு நடைபெறவுள்ளதாக  கட்சியின் தேசிய எழுச்சி மாநாட்டுக் குழு அறிவித்துள்ளது.

தீவக பகுதி கட்சி முக்கியஸ்தர்களின் ஏற்பாட்டில்  செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா அவர்களின்வழிநடத்தலில்  இம்மாநாட்டுக்கான ஏற்பாடுகள் பூர்த்தியாகியுள்ள நிலையில் குறித்த பிரதேசத்துக்கான பிரதேசமாநாடு வேலணை வங்களாவடி சந்தி பகுதியிலுள்ள கட்சியின் அலுவலக வளாகத்தில் நடைபெறவுள்ளது.

வரும் மே மாதம் 7,8 ஆகிய திகதிகளில் கட்சியின் தேசிய எழுச்சி மாநாடு நடைபெறவுள்ள நிலையில் அதன் முன்னேற்பாடாகவே இந்த பிரதேச மாநாட்டு முன்னமர்வுகள் நடத்தப்படவுள்ளன.

Related posts: