ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் மூத்த உறுப்பினர் கனகரத்தினம் மாஸ்ரர் காலமானார்!

animated_candle Saturday, November 11th, 2017

ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் மூத்த உறுப்பினரும் யாழ் மாநகர சபையின் முன்னாள் உறுப்பினருமான மாணிக்கம் கனகரத்தினம் காலமானார்.

கடந்த சில நாட்களாக யாழ்.போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவந்த இவர் இன்று (11) காலமானார். இறக்கும்போது அவருக்கு வயது 80.

அமரர் மாணிக்கம் கனகரத்தினத்தின் பூதவுடல் யாழ்ப்பாணத்திலுள்ள அன்னாரது இல்லத்தில் மக்களது  அஞ்சலிக்காக தற்போது வைக்கப்பட்டுள்ளது.

காலஞ்சென்ற அமரர் மாணிக்கம் கனகரத்தினத்திற்கு ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி இறுதி அஞ்சலியை செலுத்தும் அதேவேளை அன்னாரது பிரிவால் துயருற்றிருக்கும் குடும்பத்தினருக்கும் உற்றார் உறவினர் நண்பர்களுக்கும் ஆழ்ந்த அனுதாபத்தையும் ஆறுதலையும் தெரிவிக்கின்றது

அன்னாரது இறுதிக்கிரியைகள் பற்றிய தகவல் பின்னர் அறிவிக்கப்படும்.

இதனிடையே அமரர் மாணிக்கம் கனகரத்தினம் அவர்கள் 1998 ஆண்டு மற்றும் 2009 ஆம் ஆண்டுகளில் நடைபெற்ற உள்ளூராட்சி மன்றத் தேர்தல்களில் ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் சார்பில் போட்டியிட்டு வெற்றிபெற்று யாழ் மாநகரசபையின் உறுப்பினராக இருந்தமை குறிப்பிடத்தக்கது.


32861036_1770611652977914_7456190262398681088_n

சாகும்வரை பதவியில் இருக்கிறமாதிரி  ஆபத்துவராமல் பாருங்க சாமி… நான் எப்பவும் உங்களுக்கு துணையிருப்பன் சாமி…..!