ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் பருத்தித்துறை பிரதேச சபை உறுப்பினர் திருமதி கலாவதி அவர்களால் வறிய மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள் வழங்கிவைப்பு!

ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் பருத்தித்துறை பிரதேச சபை உறுப்பினர் திருமதி பரமேஸ்வரன் கலாவதி அவர்களின் நிதி ஒதுக்கீட்டில் பருத்தித்துறைப் பிரதேச சபைக்குட்பட்ட ஒரு தொகுதி வறிய பாடசாலை மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள் வழங்கிவைக்கப்பட்டுள்ளன.
குடும்ப வறுமை நிலை காரணமாக பாடசாலை கற்றல் நடவடிக்கைகளை முன்னெடுத்துச் செல்ல முடியாத நிலையில் காணப்படும் மாணவர்களை இனங்கண்டு அவர்களது கற்றல் செயற்பாடுகளை ஊக்குவிக்கும் முகமாக ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் பல்வேறு நலத்திட்டங்களை முன்னெடுத்து வருகின்றார்.
இந் நிலையில் அதன் ஒரு பகுதியாக குறித்த பிரதேச சபையின் உறுப்பினர் கலாவதி அவர்கள் தனது இந்த வருடத்திற்கான நிதி ஒதுக்கீட்டில் ஒரு பகுதியை வறிய மாணவர்களின் கற்றல் செயற்பாடுகளுக்கு ஒதுக்கியிருந்தார்.
இதன்பிரகாரம் இன்றையதினம் குறித்த உறுப்பினரின் நிதி ஒதுக்கீட்டில் தெரிவுசெய்யப்பட்ட 48 வறிய மாணவர்களுக்கு தலா 1500 ரூபா பெறுமதியான கற்றல் உபகரணங்கள் வழங்கி வைக்கப்பட்டன.
Related posts:
|
|