ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் வல்வெட்டி வட்டார நிர்வாக செயலாளர் கதிரவேற்பிள்ளை அரியரட்ணம் வீதி விபத்தில் அகால மரணம்!

Tuesday, November 20th, 2018

ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் வல்வெட்டித்துறை நகரசபைக்கு உட்பட்ட வல்வெட்டி வட்டார நிர்வாக செயலாளர் கதிரவேற்பிள்ளை அரியரட்ணம் அவர்கள் வீதி விபத்தில் படுகாயமடைந்திருந்த நிலையல் சிகிச்சை பலனின்றி அகால மரணமடைந்தார். அன்னாருக்கு ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி தமது ஆழ்ந்த அனுதாபத்தை தெரிவித்துக்கொள்கிறது.

கடந்த 2018.11.10 அன்று ஆவரங்காலில் இடம்பெற்ற வாகன விபத்தில் காயமடைந்து யாழ் போதனா வைத்தியசாலையில் அவசர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி அவர் இன்றையதினம் அகால மரணமடைந்தார்

அன்னாரின் பிரிவால் தவிக்கும் குடும்பத்தினர் மற்றும் உறவினர்களுக்கு ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி தனது ஆழ்ந்த அனுதாபத்தையும் ஆறுதலையும்  தெரிவித்துக் கொள்கின்றது.

46479628_500952537080988_6121290821661622272_n