ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் முயற்சியால் கண்பார்வை நோயினால் பாதிக்கப்பட்ட 29 பேருக்கு மூக்கக்கண்ணாடிகள் வழங்கிவைப்பு!

நீண்டகாலமாக கண்பார்வை குறைபாடு காரணமாக பல அசௌகரியங்களை எதிர்கொண்டுவந்த ஊர்காவற்றுறை பிரதேசத்தை சேர்ந்த பார்வை குறைந்த நோயாளர்களுக்கு ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் முயற்சியால் மூக்கக்கண்ணாடிகள் வழங்கிவைக்கப்பட்டுள்ளது.
சின்னமடு மாதா சன சமூக நிலையத்தில் நடைபெற்ற சிறப்பு நிகழ்வில் குறித்த பார்வைக்கோளாறால் பாதிப்புற்ற 29 பேருக்கு இந்த மூக்கு கண்ணாடிகள் வழங்கிவைக்கப்பட்டன.
இது தொடர்பில் தெரியவருவதாவது –
கண்பார்வை நோயினால் அதிகளவான மக்கள் ஊர்காவற்றுறை பிரதேசத்தில் வாழ்ந்துவரும் நிலையில் தமது பிரச்சினைகளுக்கு தீர்வுகண்டு தருமாறு ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவாதனந்தா அவர்களிடம் குறித்த பார்வைக் குறைபாட்டால் அவதியுற்ற நோயாளர்கள் கோரிக்கை விடுத்து வந்தனர்.
இந்நிலையில் கனேடிய திருச்சபையின் ஏற்பாட்டில் குறித்த நோயாளர்களுக்கு மருத்தவ பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டிருந்தன.
இதனடிப்படையில் மக்களின் கோரிக்கைகளை கருத்திற்கொண்ட செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சினூடாக எடுத்த முயற்சியின் பயனாக குறித்த நோயினால் பாதிக்கப்பட்ட 29 பேருக்கு மூக்கு கண்ணாடிகள் வழங்கி வைக்கப்பட்டன.
இந்நிகழ்வில் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் ஊர்காவற்றுறை பிரதேச உதவி நிர்வாக செயலாளர் புவி குறித்த பயனாளிகளுக்கு மூக்கு கண்ணாடிகளை வழங்கி வைத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
|
|