ஈழ மக்கள் ஐனநாயகக் கட்சியின் ஆதரவில் சுவிஸில் கிறிக்கெற் சுற்றுப்போட்டி!

Monday, September 2nd, 2019

சுவிஸ் நாட்டில் ஈழ மக்கள் ஐனநாயகக் கட்சியின் ஆதரவில் தமக்கென ஒரு தனித்துவத்துடன் இயங்கிவரும் ஜொலிஸ்டார் லுர்சேன் விளையாட்டுக்கழகத்தின் கிரிக்கட் சுற்றுப்போட்டி நேற்று (01.09.2019) பேர்ண் வங்டோர்ப் மைதானத்தில் சிறப்பாக நடைபெற்றது.

சுவிஸ் மென்பந்து கிரிக்கட் சம்மேளனத்தின் தலைவர் நேசனின் நெறிப்படுத்தலில், தோழர் யசி தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில், ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் சுவிஸ் பிராந்தியப் பொறுப்பாளர் தோழர் திலக் மற்றும் கட்சியின் ஜேர்மன் பிராந்தியப் பொறுப்பாளர் மாட்டின் ஜெயா ஆகியோர் பிரதம விருந்தினர்களாகக் கலந்துகொண்டனர்.

ஆரம்ப நிகழ்வில் இறுதி யுத்தத்தின் அவலங்களைச் சுமந்த முள்ளிவாய்கால் மண் மற்றும் தடயங்கள் இலங்கையிலிருந்து கொண்டுவரப்பட்டு, யுத்தத்தில் மரணித்த பொதுமக்கள் மற்றும் அனைத்து இயக்கப் போராளிகளுக்கும் அஞ்சலி செலுத்தப்பட்டு, பின்னர் போட்டிகள் இடம்பெற்றன.

இறுதியாகக் கலந்துகொண்ட அணிகளில் ஜங் டைகர் அணி முதலாமிடத்தையும், பானிக்ஸ் போய்ஸ் அணி இரண்டாமிடத்தையும் பெற்றுக் கொண்டன.

நிகழ்வில் பிரதம விருந்தினர்களாகக் கலந்து கொண்ட தோழர் திலக் மற்றும் தோழர் மாட்டின் ஜெயா மற்றும் தோழர் தாஸ், தோழர் நேசன், தோழர் பரன், தோழர் செல்வா ஆகியோர் வெற்றி பெற்ற அணிகளுக்கு பரிசில்களை வழங்கிக் கெளரவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது

Related posts: