ஈழமக்கள் ஜனநாயக கட்சியின் தலையீட்டால் பாதுகாப்பற்ற புகையிரத கடவை ஊழியர்களின் போராட்டம் முடிவுக்கு வந்ததது !

Wednesday, October 5th, 2016

நிரந்தர நியமனம் மற்றும் சம்பள அதிகரிப்பு தொழிலுக்கான பாதுகாப்பு உட்பட பல்வேறு அடிப்படை உரிமை பிரச்சினைகளை முன்வைத்து வடக்கு கிழக்கு பாதுகாப்பற்ற புகையிரத கடவை ஊழியர்கள்  மேற்கொண்டுவந்த உணவுத்தவிர்ப்பு போராட்டம் ஈழமக்கள் ஜனநாயகக் கட்சியின் முயற்சியால் முடித்துவைக்கப்பட்டது.

இன்றையதினம்(05) யாழ் புகையிரத நிலையத்தில் வடக்கு கிழக்கு பபாதகாப்பற்ற புகையிரத கடவை ஊழியர்களால் குறித்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டிருந்தது.

2

குறித்த போராட்டம் தொடர்பாக ஈழமக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ்  தேவானந்தாவின் கவனத்திற்கு கொண்டுவரப்பட்டதை அடுத்து போராட்டக்காரர்களின் நிலைமைகளை ஆராய்வதற்காக கட்சியின் தேசிய  அமைப்பாளர் பசுபதி சீவரத்தினம், கட்சியின் யாழ்.மாவட்ட நிர்வாக செயலாளர் கா வேலும்மயிலும் குகேந்திரன் (வி.கே.ஜெகன்) கட்சியின் யாழ்.மாவட்ட உதவி நிர்வாக செயலாளர் சிவகுரு பாலகிருஸ்ணன் கட்சியின் யாழ்.மாவட்ட மேலதிக நிர்வாக செயலாளர் ஐயாத்துரை ஶ்ரீரங்கேஸ்வரன் ஆகியோரை போராட்ட இடத்திற்கு நேரில் சென்று நிலைமைகளை ஆராய்ந்தறிந்து தெரிவிக்குமாறு பணித்திருந்தார்.

3

இதன்போது புகையிரத கடவை ஊழியர்கள் சார்பில் ஒன்றியத்தின் தலைவர் கருத்து தெரிவிக்கையில் –

தமிழ் பிரதேசங்களில் உள்ள மக்களதும் தொழிலார்களதும் பிரச்சினைகளைப் பேசுவதற்கு தமிழ் தேசிய கூட்டமைப்பு தயக்கம் காட்டுவது ஏன் என  கேள்வி எழுப்பியுள்ளதுடன் நாளாந்தம் தாங்கள் 8 மணித்தியாலயங்கள் கடமையாற்றி வருவதாகவும் இதற்காக தமக்கு 250 ரூபா சம்பளத்திற்கு நாளாந்தம் கிடைப்பதாகவும் தெரிவித்ததுடன் தமக்கு நிரந்தர நியமனம் மற்றும் சம்பள அதிகரிப்பு தொழிலுக்கான பாதுகாப்பு உட்பட பல அடிப்படை உரிமைகளைக் முன்வைத்து பலதரப்பினருடன் பேசியும் பலன் கிடைக்காத நிலையில் தமக்கு நிரந்தர தீர்வு வேண்டி உண்ணாவிரத போராட்டத்தை இன்றைய தினம் முன்னெடுத்ததாகவும் தெரிவித்தார்.

4

போராட்டக்காரர்களது நிலைமைகளை கட்சியின் முக்கியஸ்தர்கள் ஆராய்ந்தறிந்து செயலாளர் நாயகத்திற்கு தெரியப்படுத்தியதை அடுத்து குறித்த விடயத்தை நாடாளுமன்றில் பிரேரணையாக கொண்டுவந்து கேள்வி எழுப்பவுள்ளதாகவும் அதனூடாக  ஒரு சுமுகமான தீர்வை பெற்றுத்தருவதற்கான முயற்சிகளை மேற்கொள்வதாகவும் அதற்கு இருவாரகால அவகாசம் தனக்கு தரும்படியும் டக்ளஸ் தேவானந்தா குறித்த தனது பிரதிநிதிகளூடாக போராட்டக்காரர்களிடம் தெரியப்படுத்தியிருந்தார்.

5

செயலாளர் நாயகத்தின் கருத்தை கட்சியின் பிரதிநிதிகள் போராட்டக்காரருக்கு தெரியப்படுத்தியதை அடுத்து போராட்டக்காரர்கள் தமது போராட்டத்தை நிறுத்திக்கொள்வதற்கு சம்மதித்தனர். இதனடிப்படையில் போராட்டத்திலீடுபட்டவர்களுக்கு குளிர்பானங்களை கட்சியின் தேசிய அமைப்பாளர் பசுபதி சீவரத்தினம் வழங்கிவைத்து போராட்டத்தை முடித்துவைத்தார்.

6

Related posts:


பசளை இறக்குமதியாளர்கள், ஒரு வாரத்திற்குள் தங்கள் கையிருப்புகளை சந்தைபடுத்த வேண்டும் - விவசாயத்துறை ...
மார்ச் 11 ஆம் திகதி கச்சதீவு அந்தோனியார் ஆலயத்தின் வருடாந்த மகோற்சவம் - 500 பேருக்கு மட்டுமே அனுமதி...
உக்ரனில் இருந்து வெளியேற இலங்கை மாணவர்களுக்கு சிறப்பு வீசா - வெளிநாட்டலுவல்கள் அமைச்சு அறிவிப்பு!