ஈழமக்கள் ஜனநாயக கட்சியின் நிதியுதவியுடன் தெல்லிப்பளை அன்னமார் அறநெறி பாடசாலை புதிய கட்டிடத்திற்கான அடிக்கல் நாட்டிவைப்பு!

Friday, August 19th, 2016

தெல்லிப்பளை அன்னமார் அறநெறி பாடசாலை புதிய கட்டிடத்திற்கான அடிக்கல் இன்றையதினம் நாட்டிவைக்கப்பட்டது.

ஈழமக்கள் ஜனநாயக கட்சியின் செயலாளர் நாயகமும் நாடாளுமன்ற உறுப்பினரமான டக்ளஸ் தேவானந்தாவின் நிதி ஒதுக்கிட்டின் மூலம் குறித்த அறநெறிப் பாடசாலைக்கு நிதி வழங்கப்பட்டு இன்றையதினம்(19) அதற்கான அடிக்கல் நாட்டிவைக்கப்பட்டது.

குறித்த நிகழ்வில் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா சார்பாக கட்சியின் யாழ் மாவட்ட நிர்வாக செயலாளரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான  கா.வேலும்மயிலும் குகேந்திரன் (வி.கே. ஜெகன்) சிறப்பு அதிதியாக கலந்துகொண்டு புதிய கட்டிடத்தக்கான அடிக்கல்லை நாட்டிவைத்தார்.

இந்நிகழ்வின்போது .அறநெறி பாடசாலை சமூகத்தினருடன் ஈழமக்கள் ஜனநாயக கட்சின் வலி வடக்கு பிரதேச நிர்வாக செயலாளர்  இராசரத்தினம் ஜெயபாலசிங்கம் (அன்பு) உடனிருந்தார்.

unnamed

unnamed (1)

Related posts: