ஈழமக்கள் ஜனநாயக கட்சியின் முக்கியஸ்தர் குழு நெடுந்தாரகையை   பார்வையிட்டது!

image-0-02-06-3e4dec549a4f5ff5dac3c75bfe56a72b7f1a6911c76eb1678fffa444eb7590a6-V Wednesday, January 11th, 2017

குறிகட்டவான் இறங்குதுறையில் தரித்துநிற்கும் நெடுந்தாரகை படகை ஈழமக்கள் ஜனநாயக கட்சியின் முக்கியஸ்தர்கள் குழு நேரில் சென்று பார்வையிட்டுள்ளனர்.

குறித்த படகை நேற்றையதினம் கட்சியின் யாழ் மாவட்ட நிர்வாக செயலாளர் கா வேலும்மயிலும் குகேந்திரன் (வி.கே.ஜெகன்) மற்றும் கட்சியின் நெடுந்தீவு பிரதேச நிர்வாக செயலாளர் முரளி ஆகியோர் அடங்கிய குழவினர் பார்வையிட்டுள்ளனர்.

தீவகப்பகுதி மக்களின் போக்குவரத்து அசௌகரியங்களை தீர்த்துவைப்பதற்காக குறிகட்டுவான் – நெடுந்தீவுக்கு இடையில் பயணிகள் போக்குவரத்தில் ஈடுபட  புதிதாக அமைக்கப்பட்டுள்ள நெடுந்தாரகை படகு கடந்த ஆட்சிக்காலத்தில் ஈழமக்கள் ஜனநாயக கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா மேற்கொண்ட முயற்சியின் காரணமாக 150 மில்லியன் ரூபா செலவில் புதிதாக அமைக்கப்பட்டது.

குறித்த படகில் சுமார் 100 பயணிகள் பயணிக்கத்தக்க வகையில் கட்டப்பட்டுள்ளதடன் நெடந்தீவு மக்களுக்கு ஒரு வரப்பிரசாதமாகவும் அமைந்துள்ளது.

இதனிடையே குறித்த படகின் சேவையை அரசியல் காரணங்களுக்காக காலம் தாழ்த்தாது மக்களது நலன் கருதி விரைவாக அதனை சேவையிலீடுபடுத்துவதற்கான முயற்சிகளை மேற்கொள்ளவேண்டும் என திவகப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

image-0-02-06-3e4dec549a4f5ff5dac3c75bfe56a72b7f1a6911c76eb1678fffa444eb7590a6-V

image-0-02-06-16398a3a19e725f2337d554b882f87bd73ee50c205ea7b9f1f09b61e95346631-V


32861036_1770611652977914_7456190262398681088_n

சாகும்வரை பதவியில் இருக்கிறமாதிரி  ஆபத்துவராமல் பாருங்க சாமி… நான் எப்பவும் உங்களுக்கு துணையிருப்பன் சாமி…..!