ஈழமக்கள் ஜனநாயக கட்சியின் உதவியுடன் சுன்னாகத்தில் “கோர்” அமைப்புக்கு நிரந்தர கட்டிடம்!

01 Monday, November 28th, 2016

ஈழமக்கள் ஜனநாயக கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தவின் நிதி ஒதுக்கீட்டின் மூலம் சுன்னாகம் கிராமிய வலுப்படுத்தலுக்கான அமைபுகளின் இணையத்தின் (கோர்) நிரந்தர கட்டித்திற்கான அடிக்கல் இன்றையதினம் நாட்டப்பட்டது.

சுன்னாகம் பூதவராயர் கோவிலடி பகுதியில் அமைக்கப்படும் குறித்த கட்டிடத்திற்கான அடிக்கல்லை ஈழமக்கள் ஜனநாயக கட்சியின் முக்கியஸ்தரான சொல்லின் செல்வர் இரா செல்வடிவேல் பிரதம அதிதியாக கலந்துகொண்டு நாட்டிவைத்தார்.

01

வறிய கிராம மக்களுக்கு பல்வேறுபட்ட செயற்றிட்டங்களை மேற்கொண்டுவரும் குறித்த கிராமிய வலுப்படுத்தலுக்கான அமைப்புகளின் இணையம் நிரந்தத கட்டிடம் இன்மையால் பல்வேறுபட்ட இடர்பாடுகளை சந்தித்துவந்திருந்த நிலையில் குறித்த அமைப்பினரால் ஈழமக்கள் ஜனநாயக கட்சியிடம் விடுத்த வேண்டுகொளுக்கிணங்க நிதியுதவி வழங்கப்பட்டு அதற்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு இன்றையதினம் நடைபெற்றது.

2

இந்நிகழ்வில் ஈழமக்கள் ஜனநாயக கட்சியின் தேசிய அமைப்பாளரும் “கோர்” அமைப்பின் தலைவருமான பசுபதி சீவரத்தினம், கட்சியின் யாழ் மாவட்ட நிரவாக செயலாளர் கா வேலும்மயிலும் குகோந்திரன் (வி.கே.ஜெகன்), கட்சியின் யாழ்.மாவட்ட மேலதிக நிர்வாக செயலாளர் ஐயாத்துரை ஶ்ரீரங்கேஸ்வரன், கட்சியின் சுன்னாகம் பகுதி நிர்வாக செயலாளர் அரசன் சந்திரன் (வலன்ரயன்), ஆகியோருடன் பிரதேச பொருளாதார உத்தியோகத்தர் மற்றும் “கோர்” அமைப்பின் உத்தியோகத்தர்கள் கலந்துகொண்டு அடிக்ககளை நாட்டிவைத்து சிறப்பித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

5

3

4

000

6

7