ஈழமக்கள் ஜனநாயக கட்சியால் விளையாட்டுக் கழகங்களுக்கு உபகரணங்கள் வழங்கிவைப்பு!
Thursday, October 20th, 2016அரியாலை உதயபுரம் கிராம அபிவிருத்தி சங்கம், ஆனைக்கோட்டை லெவன் ஸ்ரார் விளையாட்டுக் கழகம் மற்றும் நீராவியடி நண்பர்கள் விளையாட்டுக் கழகம் ஆகியவற்றுக்கு விளையாட்டு உபகரணங்கள் மற்றும் தளபாடங்களை ஈழமக்கள் ஜனநாயக கட்சி வழங்கியுள்ளது.
ஈழமக்கள் ஜனநாயக கட்சியின் செயலாளர் நாயகமும் நாடாளுமன்ற உறுப்பினருமான டக்ளஸ் தேவானந்தாவின் பன்முகப்படுதத்தப்பட்ட நிதி ஒதுக்கீட்டிலிருந்து நிதி ஒதுக்கிடு செய்யப்பட்டு குறித்த அமைப்புகளுக்கான உதவித்திட்டங்கள் வழங்கி வைக்கப்பட்டன.
நல்லூர் பிரதேச செயலக மண்டபத்தில் நடைபெற்ற குறித்த உதவித்திட்டம் வழங்கிவைக்கும் நிகழ்வு பிரதேச செயலர் சிறி தலைமையில் கடந்த திங்களன்று நடைபெற்றது. குறித்த நிகழ்வில் சிறப்பு அதிதியாக கலந்தகொண்ட கட்சியின் நல்லூர் பிரதேச நிர்வாக செயலாளர் அம்பலம் இரவீந்திரதாசனால் உரிய அமைப்புகளிடம் உதவித்திட்ட பொருட்கள் வழங்கிவைக்கப்பட்டன..
இதன்போது சமுர்த்தி உத்தியோகத்தர்கள் மற்றும் பிரதேச அபிவிருத்தி உத்தியோகத்தர் அகியோரும் பொது அமைப்புகளை சேர்ந்த பலரும் கலந்தகொண்டனர்.
Related posts:
|
|