ஈழமக்கள் ஜனநாயகக் கட்சியால் காரைநகர் பிரதேச விளையாட்டுக் கழகங்களுக்கு விளையாட்டு உபகரணங்கள் வழங்கிவைப்பு!

Wednesday, November 9th, 2016

கரைநகர் பிரதேசத்தில் உள்ள தெரிவு செய்யப்பட்ட விளையாட்டுக் கழகங்களுக்கு ஈழமக்கள் ஜனநாயக கட்சியால் விளையாட்ட உபகரணங்கள் வழங்கிவைக்கப்பட்டது.

ஈழமக்கள் ஜனநாயக கட்சியின் காரைநகர் பிரதேச நிர்வாக செயலாளர் வீரமுத்து கண்ணனிடம் குறித்த பகுதி விளையாட்டுக்கழகங்கள் சில விடுத்த கோரிக்கையின் அடிப்படையில்  செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தாவின் பன்முகப்படுத்தப்பட்ட நிதி ஒதுக்கிட்டின் மூலம் இன்றையதினம் (09) குறித்த கழகங்களுக்கு விளையாட்டு உபகரணங்கள் வழங்கி வைக்கப்பட்டுள்ளது.

3

காரைநகர் பிரதேச செயலகத்தில் பிரதேச செயலர் தலைமையில் நடைபெற்ற இந்த நிழ்வில் ஈழமக்கள் ஜனநாயக கட்சியின் யாழ் மாவட்ட நிர்வாக செயலாளர் கா வேலும்மயிலும் குகேந்திரன் (வி.கே.ஜெகன்) கட்சியின் காரைநகர் பிரதேச நிர்வாக செயலாளர் வீரமுத்து கண்ணன் (ரஜனி) ஆகியோர் விசேட அதிதிகளாக கலந்துகொண்டு தெரிவுசெய்யப்பட்ட கழகங்களுக்கான விளையாட்டு உபகரணங்களை வழங்கிவைத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

4

Related posts: