ஈரான் துறைமுகங்களில் இலங்கையர்களுக்கு வேலைவாய்ப்பு – ஈரானுக்கான இலங்கைத் தூதுவர் தெரிவிப்பு!
Friday, November 18th, 2022ஈரானின் 6 முக்கிய துறைமுகங்களில் வேலை வாய்ப்புக்காக இலங்கையர்களை அனுப்புவது குறித்து ஆலோசித்து வருவதாக ஈரானுக்கான இலங்கைத் தூதுவர் விஸ்வநாத் அபோன்சு தெரிவித்துள்ளார்.
துறைமுகங்கள், கப்பல்துறை மற்றும் விமானப் போக்குவரத்து அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வாவுடன் நேற்று (17) இடம்பெற்ற கலந்துரையாடலில், தெஹ்ரானுக்கும் கொழும்புக்கும் இடையில் நேரடி விமான சேவைகளை ஆரம்பிப்பது தொடர்பில் கவனம் செலுத்தப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார்.
மேலும் ஈரானிய சுற்றுலா பயணிகளை இலங்கைக்கு அனுப்புவது தொடர்பில் சுற்றுலாத்துறையில் ஈடுபட்டுள்ளவர்களுடன் கலந்துரையாடி வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை
தென்கொரியாவில் தொழில் வாய்ப்புகளுக்காக மேலும் 301 பேர் இந்த வாரம் நாட்டில் இருந்து அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.என தொழில் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்புகள் அமைச்சு தெரிவித்துள்ளது.
முதல் குழுவில் 134 பேரும், இரண்டாம் குழுவில் 132 பேரும் தென்கொரியாவுக்கு சென்றுள்ளதாக அந்த அமைச்சு விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது
Related posts:
|
|