ஈரான் இஸ்லாமிய குடியரசுக்கு உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொள்ளும் வெளி விவகார அமைச்சர் அலி சப்ரி!

Friday, August 4th, 2023

இலங்கையின் வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி 2023 ஆகஸ்ட் 04 முதல் ஆகஸ்ட் 07, 2023 வரை ஈரான் இஸ்லாமிய குடியரசுக்கான உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொள்ளவுள்ளதாக வெளிவிவகார அமைச்சு அறிவித்துள்ளது.

அத்துடன் ஈரான் வெளிவிவகார அமைச்சர் டாக்டர் ஹொசைன் அமீர் அப்துல்லாஹியனின் அழைப்பின் பேரில் இந்த உத்தியோகபூர்வ விஜயம் இடம்பெறும் என அமைச்சு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த இந்த விஜயத்தின் போது, வெளியுறவு அமைச்சர் ஈரானிய ஜனாதிபதி டாக்டர் செயிட் இப்ராஹிம் ரைசியை மரியாதையுடன் சந்திக்கவும், ஈரான் வெளியுறவு அமைச்சர் டாக்டர் ஹொசைன் அமீர் அப்துல்லாஹியன் மற்றும் பிற மூத்த அரசாங்க அதிகாரிகளுடன் சந்திப்புகளை நடத்தவும் திட்டமிட்டுள்ளார்.

இதேவேளை ஈரானின் அரசியல் மற்றும் சர்வதேச ஆய்வுகள் நிறுவனத்தில் அமைச்சர் உரையொன்றையும் நிகழ்த்தவுள்ளதாக வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது

Related posts: