ஈரானுக்கான ஜனாதிபதியின் விஜயம் இரத்து!

Tuesday, January 17th, 2017

ஈரானுக்கான விஜயத்தை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இரத்து செய்துள்ளதாக தகவல் வெளியிடப்பட்டுள்ளது.இந்த விஜயம் இரத்து செய்யப்பட்டமை குறித்து ஜனாதிபதி செயலகம் ஈரான் தூதரகத்திற்கு உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளது.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன எதிர்வரும் 23ஆம் திகதி ஈரானுக்கு உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொள்ள திட்டமிட்டிருந்தார். தற்போது அந்த விஜயத்தை திடீரென இரத்து செய்துள்ளார்.

இதேவேளை, ஈரானிய அரசாங்கத்தின் விசேட அழைப்பின் பேரில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இந்த விஜயத்தினை மேற்கொள்ள திட்டமிட்டிருந்தார். எனினும் தற்போது இந்த விஜயம் எதற்காக இரத்து செய்யப்பட்டது என்பது குறித்த காரணங்கள் இதுவரையும் வெளியிடப்படவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

mythiribala-6666s-720x480

Related posts: