இஸ்ரேல் தூதுவர் வெளிவிவகார அமைச்சர் ஜி.எல். பீரிஸ் விசேட சந்திப்பு – இரு நாடுகளுக்கிடையே வர்த்தகம், முதலீடு, சுற்றுலா தொழில்நுட்ப ஒத்துழைப்பை மேம்படுத்துவது குறித்தும் ஆராய்வு !

இலங்கைக்கு ஒரே நேரத்தில் அதிகாரமளிக்கப்பட்டுள்ள இஸ்ரேல் தூதுவர் நவோர் இட்சாக் கிலோன், வெளிநாட்டு அமைச்சர் பேராசிரியர் ஜி.எல். பீரிஸை மரியாதை நிமித்தம் சந்தித்து பரஸ்பர நலன்கள் குறித்து கலந்துரையாடினார்.
இதன்போது புதிதாக நியமிக்கப்பட்ட தூதுவருக்கு வாழ்த்துக்களைத் தெரிவித்த வெளிநாட்டு அமைச்சர், இஸ்ரேலுடனான தனது பங்காளித்துவத்தை மேலும் முன்னேற்றுவதற்கான இலங்கையின் அர்ப்பணிப்பை மீண்டும் வலியுறுத்தினார்.
அத்துடன் இரு நாடுகளினதும் நலனுக்காக வர்த்தகம், முதலீடு, சுற்றுலா மற்றும் தொழில்நுட்ப ஒத்துழைப்பை மேம்படுத்துவது குறித்து வெளிநாட்டு அமைச்சர் பீரிஸ் மேலும் வலியுறுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
துருக்கி வெளிவிவகார அமைச்சர் இலங்கையில் !
இணையத்தளங்களின் பாதுகாப்பு குறித்து அவதானிக்குமாறு கணனி அவசர கண்காணிப்பு பிரிவு அறுவுறுத்தல்!
வட்டுக்கோட்டைச் சிறுமி கல்வியங்காட்டில் சடலமாக மீட்பு – பொலிசார் தீவிர விசாரணை!
|
|