இவ் வருடம் சந்திக்கவுள்ள முதல் தேர்தல்?

Wednesday, April 26th, 2017

 

தற்போதைய அரசாங்கம் 2017ஆம் ஆண்டு முகம்கொடுக்கும் முதல் தேர்தல், புதிய அரசியலமைப்பு குறித்த பொது வாக்கெடுப்பே என, அமைச்சர் ராஜித்த சேனாரத்ன தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட பின்னர், குறித்த பொதுவாக்கெடுப்பு நடத்தப்படவுள்ளதாக சுட்டிக்காட்டியுள்ள அவர், தற்போது புதிய அரசியலமைப்பை உருவாக்க குழுவொன்று அமைக்கப்பட்டுள்ளதாகவும், மக்களுக்கு தெளிவுபடுத்தும் நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

இதற்கமைய விரைவில் புதிய அரசியலமைப்பு வௌியிடப்படவுள்ளதாகவும், ராஜித்த சேனாரத்ன மேலும் தெரிவித்துள்ளார். சுகாதார அமைச்சில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் மேற்கண்டவாறு கருத்து வௌியிட்டுள்ளார். இதேவேளை, மக்கள் வாக்கெடுப்பின் பின்னர் உள்ளூராட்சி மன்றங்கள் மற்றும் மாகாண சபைகள் தேர்தல் நடத்தப்படும் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

Related posts: