இவ்வாண்டு 27603 பேருக்கு பல்கலைக்கழக வாய்ப்பு!
Thursday, April 21st, 2016இலங்கையின் பல்கலைக்கழகங்களில் கல்வி பயில்வதற்கு இம்முறை 27603 மாணவ மாணவியரை இணைத்துக் கொள்ள உள்ளதாக பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.
15 பல்கலைக்கழகங்கள் மற்றும் 18 உயர் கல்வி நிறுவனங்களில் கற்கை நெறிகள் ஆரம்பிக்கப்பட உள்ளன. கடந்த ஆண்டில் 25200 மாணவ மாணவியருக்கு பல்கலைக்கழக வாய்ப்பு கிடைக்கப்பெற்றதாக பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் தலைவர் பேராசிரியர் மொஹான் டி சில்வா தெரிவித்துள்ளார்.
பல்கலைக்கழக மாணவர்களை பல்கலைக்கழகங்களுக்கு உள்ளீர்ப்பது தொடர்பான கையெடும் விண்ணப்பப் படிவங்களும் எதிர்வரும் 24ம் திகதி மாணவர்களுக்கு வழங்கப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
பல்கலைக்கழகமொன்றிற்கு விண்ணப்பம் செய்யும் முன்னர் தெரிந்து கொள்ள வேண்டிய அடிப்படை விடயங்கள் தொடர்பிலான தகவல்கள் அண்மைய செய்தித்தாள்களின் ஊடாக வழங்கப்பட்டுள்ளது எனவும் மாணவர் கையேடு எளிமையாக புரிந்து கொள்ள கூடிய வகையில் அச்சிடப்படடுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்
Related posts:
|
|