இவ்வாண்டு 120 ஆயிரம் இலங்கையர் வேலைவாய்ப்புக்காக வெளிநாடு சென்றுள்ளனர் – துறைசார் அமைச்சு தகவல்!

Saturday, January 1st, 2022

இவ்வருடம் 120 ஆயிரம் இலங்கையர்கள் இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகத்தில் பதிவு செய்து வேலைவாய்ப்புக்காக வெளிநாடு சென்றுள்ளதாக வெளிநாட்டு வேலைவாய்ப்பு ஊக்குவிப்பு மற்றும் சந்தை பல்வகைப்படுத்தல் அமைச்சு தெரிவித்துள்ளது.

கொரோனா தொற்று நோய் இருந்த போதிலும் கட்டாருக்கு 30 ஆயிரம் பேரும், சவூதி அரேபியாவுக்கு 27 ஆயிரம் பேரும், ஐக்கிய அரபு அமீரகத்துக்கு 20 ஆயிரம் பேரும், தென் கொரியாவுக்கு ஆயிரத்து 400 பேரும், சிங்கப்பூரில் ஆயிரத்து 100 பேரும், சைப்ரஸில் ஆயிரத்து ,600 பேரும், ஜப்பானில் 800 பேரும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தில் பதிவு செய்து குறித்த நாடுகளில் பணியாற்றி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Related posts: