இவ்வாண்டில் இதுவரை 92 இந்திய மீனவர்கள் கைது!
Monday, August 1st, 2016
இலங்கை கடல் எல்லைக்குள் அத்துமீறி நுழைந்து மீன்பிடித்த குற்றச்சாட்டில் இவ்வாண்டின் ஏழு மாதங்களில் 92 இந்திய மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதுடன் இவர்கள் அனைவரும் விடுவிக்கப்பட்டுள்ளதாக யாழ்.மாவட்ட கடற்றொழில் நீரியல்வளத்துறை திணைக்களத்தின் உதவிப் பணிப்பாளர் பாலசுப்பிரமணியம் ரமேஸ்கண்ணா தெரிவித்துள்ளார்.
ஜனவரி மாதம் 16 மீனவர்களும் மார்ச் மாதம் 20 மீனவர்களும், ஏப்ரல் மாதம் 13 மீனவர்களும், ஜூன் மாதம் 16 மீனவர்களும், ஜூலை மாதம் 27 மீனவர்களும் கைது செய்யப்பட்டிருந்தனர். இந்த மீனவர்களிடமிருந்து 19 விசைப்படகுகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
யாழ்ப்பாணச் சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த இவர்கள் அனைவரும், சட்டமா அதிபர் திணைக்களத்திடமிருந்து கிடைக்கப்பெற்ற அறிவுறுத்தலுக்கமைய பருத்தித்துறை, ஊர்காவற்துறை, மற்றும் மல்லாகம் நீதிமன்றங்களினால் விடுதலை செய்யப்பட்டிருந்தனர். ஆனால், இவர்களின் படகுகள் மற்றும் சான்றுப்பொருட்கள் தொடர்ந்தும் தடுத்து வைக்கப்பட்டுள்ளது என்றார்.
Related posts:
|
|