இவ்வருட இறுதிக்குள் நாட்டுமக்கள் அனைவருக்கும் தடுப்பூசி வழங்கப்படும் – இதுவே அரசாங்கத்தின் நிலைப்பாடு என இராணுவத் தளபதி சவேந்திர சில்வா அறிவிப்பு!

Wednesday, June 9th, 2021

இந்த ஆண்டு இறுதிக்குள் அல்லது அடுத்த ஆண்டு ஆரம்பதிற்குள் நாட்டு மக்கள் அனைவருக்கும் கொரோனா தடுப்பூசியை செலுத்த அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக இராணுவத் தளபதி சவேந்திர சில்வா அறிவித்துள்ளார்.

இது தொடர்பில் மேலும் கருத்து தெரிவித்த அவர் –

கொரோனா தொற்று காரணமாக நாட்டின் முக்கிய அபிவிருத்தி திட்டங்கள் மற்றும் உட்கட்டமைப்பு திட்டங்கள் தாமதமாகவில்லை என்றும் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் கொரோனா தொற்று காரணமாக பொருளாதாரம் சரிவடைந்துள்ள நிலையில் உலக நாடுகளுடன் பொருளாதார, இராஜதந்திர மற்றும் சுமூகமான உறவுகளைப் பேண வேண்டியது அவசியம் என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

அதேநேரம் தொற்றுநோயை கட்டுப்படுத்தல், பொருளாதாரத்தைப் பாதுகாத்தல் மற்றும் நாட்டை மீண்டும் இயல்பு நிலைக்கு கொண்டுவருவது என்பது மிகப்பெரிய சவாலான விடயம் என்றும் இராணுவத் தளபதி சவேந்திர சில்வா சுட்டிக்காட்டியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

000

Related posts: