இவ்வருட இறுதிக்குள் இலங்கைக்கு 6 பில்லியன் அமெரிக்க டொலர்கள் தேவை – பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவிப்பு!

ஜப்பானுடனான உறவுகள் முறிந்துவிட்டதாகவும், அந்த உறவை சரிசெய்து அவர்களின் நம்பிக்கையை மீட்டெடுக்க சிறிது காலம் எடுக்கும் எனவும் பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
இன்று பிரதிநிதிகளுடனான சந்திப்பின் போதே பிரதமர் இதனைக் குறிப்பிட்டதாக பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ளது.
மேலும் இது குறித்து அறிக்கையை வெளியிட்ட பிரதமர் அலுவலகம், இவ்வருட இறுதிக்குள் இலங்கைக்கு 6 பில்லியன் அமெரிக்க டொலர்கள் தேவைப்படுவதாகவும் பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளதாக குறிப்பிட்டுள்ளது.
இதன்படி, இலங்கையின் கடனை செலுத்த 5 பில்லியன் அமெரிக்க டொலர்களும், வெளிநாட்டு கையிருப்பினை வலுப்படுத்த 1 பில்லியன் அமெரிக்க டொலர்களும் தேவைப்படுவதாக பிரதமர் மேலும் குறிப்பிட்டுள்ளார்
சர்வதேச நாணய நிதியத்துடன் பேச்சுவார்த்தை நடந்து வருவதாகவும், மாத இறுதிக்குள் பேச்சுவார்த்தைகள் முடிவடையும் என்று அவர் நம்புவதாகவும் பிரதமர் தெரிவித்துள்ளார்.
நிதி மற்றும் சட்ட ஆலோசகர்களை நியமித்ததைத் தொடர்ந்து, கடன் மறுசீரமைப்பு தொடங்கப்பட்டுள்ளதாகவும் பிரதமர் பிரதிநிதிகளுக்கு விளக்கினார்.
மேலும் கருத்து தெரிவித்த பிரதமர் விக்ரமசிங்க, நன்கொடை அளிக்கும் நாடுகளுடன் பேச்சு வார்த்தைகள் தொடர்ந்து நடைபெற்று வருவதாகவம் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
000
Related posts:
|
|