இவ்வருடம் முதல் 150 மாணவர்களுடன் புதிய இரண்டு மருத்துவ பீடங்கள் !
Wednesday, August 1st, 2018
இவ்வருடம் முதல் புதிதாக இரண்டு வைத்திய பீடங்கள் செயற்படுவதாக பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.
சப்ரகமுவ பல்கலைக்கழகத்தில் புதிதாக வைத்திய பீடமொன்று ஆரம்பித்துள்ளதாகவும் இதற்கு 2017,2018 ஆம் கல்வியாண்டுக்காக 75 மாணவர்கள் உள்வாங்கப்பட்டுள்ளதாகவும் அந்த ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
அத்துடன் வடமேல் மாகாணத்திலும் புதிதாக வைத்திய பீடம் ஆரம்பித்துள்ளதாகவும் இதற்கும் 75 மாணவர்கள் புதிதாக அனுமதிக்கப்படவுள்ளதாகவும் அந்த ஆணைக்குழு மேலும் தெரிவித்துள்ளது.
இதற்கு மேலதிகமாக சப்ரகமுவ பல்கலைக்கழகத்தில் 2017, 2018 ஆம் ஆண்டுக்காக புதிய இரு பீடங்கள் அமைக்கப்பட்டுள்ளதாகவும் இதற்காக 150 மாணவர்கள் அனுமதிக்கப்பட வெட்டுப்புள்ளியில் இடமளிக்கப்பட்டுள்ளதாகவும் அந்த ஆணைக்குழு மேலும் தெரிவித்துள்ளது.
Related posts:
மாற்றுத் திறனாளிகளுக்கு விஷேட திட்டம்!
கொரோனா வைரஸ்: உலக சுகாதார மையம் அதி உச்ச எச்சரிக்கை!
அமரர் தோழர் செல்வம் அவர்களின் ஊறவுகளுக்கு அமைச்சர் டக்ளஸ் ஆறுதல்!
|
|