இவ்வருடம் டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை 2000 வீதமாக அதிகரிப்பு – பேராசிரியர் நிலீகா மலவிகே சுட்டிக்காட்டு!
Sunday, June 11th, 2023கடந்த வருடத்துடன் ஒப்பிடுகையில் இந்த வருடத்தின் இதுவரையான காலப்பகுதியில் டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை 2000 வீதமாக அதிகரித்துள்ளதாக பேராசிரியர் நிலீகா மலவிகே சுட்டிக்காட்டியுள்ளார்.
ட்விட்டர் பதிவொன்றின் ஊடாக அவர் இந்த விடயத்தை தெரிவித்துள்ளார்.
கடந்த வருடத்தில் ஜனவரி மாதம் முதல் ஜுன் மாதம் 9ஆம் திகதி வரை நாட்டில் 2 ஆயிரத்து 52 டெங்கு நோயாளர்கள் பதிவாகியிருந்தனர்.
எனினும், இந்த வருடத்தின் நேற்று வரையான காலப்பகுதியில் பதிவாகிய டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை 42 ஆயிரத்து 184 ஆகும் என அவர் தமது பதிவில் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை, கடந்த 10 வருட காலப்பகுதியில், பதிவாகும் டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கத்தின் தலைவர் உபுல் ரோஹண தெரிவித்துள்ளார்.
நாட்டில், தற்போது வரையில் அதிக அவதானம் மிக்க 61 சுகாதார பரிசோதகர்கள் பிரிவுகள் அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது
000
Related posts:
|
|