இவ்வருடம் டெங்குத் தொற்று குறைவு – தேசிய டெங்கு ஒழிப்புப் பிரிவு!

Tuesday, January 8th, 2019

கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு டெங்குத் தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை வீழ்ச்சி கண்டுள்ளது என்று தேசிய டெங்கு ஒழிப்புப் பிரிவு சுட்டிக்காட்டியுள்ளது.

2017 ஆம் ஆண்டு ஒரு இலட்சத்து 86 ஆயிரத்து 101 ஆகக் காணப்பட்ட டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை 2018 ஆம் ஆண்டாகும்போது 50 ஆயிரத்து 163 ஆகப் பதிவாகியுள்ளது. மேல் மாகாணத்திலேயே 37.1 வீதமாக டெங்கு நோயாளர்கள் அதிகளவான டெங்குத் தொற்றாளர்கள் இனங்காணப்பட்டுள்ளனர்.

2017 ஆம் ஆண்டு 29 ஆவது வாரத்திலேயே அதிக டெங்குத்  தொற்றாளர்கள் இனங்காணப்பட்டுள்ளனர். தற்போது டெங்குத் தொற்று இனங்காணப்பட்ட பகுதிகளைச் சுத்திகரிக்கும் பணிகள் விரிவாக்கப்பட்டுள்ளன என்றும் தெரிவிக்கப்பட்டது.

Related posts: