இவ்வருடம் உள்ளூராட்சி தேர்தல் இல்லை: மஹிந்த தேசப்பிரிய!

Saturday, August 6th, 2016

நடைமுறையிலுள்ள உள்ளூராட்சிமன்ற சட்டத்தின் கீழ் உள்ளூராட்சி சபைத் தேர்தல்களை நடத்த முடியாது என்று தேர்தல்கள் ஆணைக்குழுவின் ஆணையாளர் மஹிந்த தேசப்பிரிய அனைத்து மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சிமன்ற அமைச்சிற்கு கடிதம் மூலம் அறிவித்துள்ளார்.

தேர்தல்கள் ஆணையாளரின் கடிதம் கிடைக்கப்பெற்றிருப்பதாக மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சிமன்ற அமைச்சர் பைஸர் முஸ்தபா உறுதிப்படுத்தியுள்ளார். தற்போது நடைமுறையில் உள்ள உள்ளூராட்சி மன்ற சட்டத்தில் 20க்கும் மேற்பட்ட குறைபாடுகள் சுட்டிக்காட்டப்பட்டுள்ளதோடு, அரசியல் சார்பிலான குறைபாடுகளும் காணப்படுகின்றன.

2012ஆம் ஆண்டு 22ஆம் இலக்க உள்ளூராட்சி சபைச் சட்டத்தின் கீழ் உள்ளூராட்சி சபைத் தேர்தல் நடத்தப்படவிருப்பதோடு, சட்டத்தில் திருத்தங்கள் மேற்கொள்ளப்படாமல் தேர்தலை நடத்துவது யதார்த்தத்திற்கு முரணான விடயம் என்று அமைச்சர் பைஸர் முஸ்தபா கூறியுள்ளார்.

எவ்வாறாயினும் இந்த சட்டத்தில் திருத்தங்கள் மேற்கொள்ளல் மற்றும் எல்லை நிர்ணயப் பணிகளை நிறைவுபடுத்தல் போன்ற விடயங்கள் மேற்கொள்வதற்கான காலஅவகாசம் தேவைப்படுவதோடு, எதிர்வரும் வருட ஆரம்பத்தில் தேர்தலை நடத்த எதிர்பார்த்திருப்பதாக அமைச்சர் கூறியுள்ளார்.

Related posts: