இவ்வருடத்தின் முதல் 4 மாதங்களில் யானை-மனித மோதல்களால் 34 பேர் பலி – விவசாய, வனஜீவராசிகள் மற்றும் வனவள பாதுகாப்பு அமைச்சு தெரிவிப்பு!
Monday, August 15th, 2022இந்த வருடத்தின் முதல் 4 மாதங்களில் மாத்திரம் யானை -மனிதர்களுக்கு இடையிலான மோதலில் 34 பேர் மரணித்துள்ளதாக விவசாய, வனஜீவராசிகள் மற்றும் வனவள பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.
இதேவேளை 47 காட்டு யானைகளும் உயிரிழந்ததாகவும் அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.
8 மாகாணங்கள் மற்றும் 19 மாவட்டங்களில் உள்ள 131 பிரதேச செயலகப் பிரிவுகளில் யானை மற்றும் மனித மோதல் சம்பவங்கள் பதிவாகியுள்ளன.
இந்த ஆண்டில் உயிரிழந்த 47 காட்டு யானைகளில், 13 யானைகள் துப்பாக்கிச் சூடு காரணமாகவும், மேலும் 17 காட்டு யானைகள் மின்சாரம் தாக்கியும் மரணித்துள்ளன. கடந்த 3 வருடங்களில் யானை- மனித மோதல்கள் அதிகரித்து வருகின்றன.
2019ஆம் ஆண்டில் 407 யானைகள் உயிரிழந்த அதேவேளை 122 மனிதர்களும் உயிரிழந்துள்ளனர். 2020 ஆம் ஆண்டில், யானை-மனித மோதலால் 112 பேர் உயிரிழந்தனர்.
கடந்த வருடத்தில் யானை மனித மோதலால் 142 பேர் உயிரிழந்ததாகவும் விவசாய, வனஜீவராசிகள் மற்றும் வனவள பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது..
000
Related posts:
|
|