இளைஞர் வேலைவாய்ப்பு திட்டத்திற்கு அமெரிக்கா உதவி!

Saturday, October 21st, 2017

இளைஞர்களுக்கு வேலைவாய்ப்புக்களை பெற்றுக்கொள்வதற்கான யூலீட் என்ற இளைஞர் வேலைவாய்ப்பு திட்டத்திற்கான ஆரம்ப கட்ட நிதி உதவியாக அமெரிக்கா, 12 மில்லியன் அமெரிக்க டொலர்களை வழங்கியுள்ளது.

இலங்கை அரசாங்கமும் அமெரிக்காவும் இந்த யூலீட் என்ற திட்டத்தை முன்னெடுத்துள்ளது. அமெரிக்காவின் சர்வதேச அபிவிருத்தி பிரிவு இலங்கையுடன் இணைந்து முன்னெடுக்கும் இத்திட்டத்தின் ஆரம்ப நிகழ்வு இலங்கை வர்த்தக சம்மேளத்தின் கொழும்பு தலைமையகத்தில் இடம்பெற்றது.

இத்திட்டத்தின் கீழ் இளைஞர்களுக்கு வேiவாய்ப்பு தொழிற்பயிற்சி தொழிற்துறைகளின் மேம்பாட்டுக்கு திட்டங்கள் முன்னெடுக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts:

நாட்டை முழுமையாக முடக்கும் அவசியமில்லை - மக்களது பூரண ஒத்துழைப்பே அவசியம் - இராணுவத் தளபதி கோரிக்கை...
சமூக வலைத்தளங்களில் பகிரப்படும் விண்ணப்பப்பத்திரம் போலியானது - 18 வயதிற்கு உட்பட்டோருக்கு சுகாதார அம...
பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல் என்றால் ஒரு அடி கூட பின்வாங்கமாட்டேன் - அமைச்சர் டிரான் அலஸ் உறுதி!