இளைஞர் யுவதிகளுக்கு 21 மில்லியன் ரூபா கடன் உதவி!

இளைஞர் தொழில்வாண்மையாளர்களை ஊக்குவிப்பதற்கான பிரதமர் அலுவலகத்தின் கொள்கை அபிவிருத்தி பிரிவு, இளைஞர்களுக்காக முன்னெடுத்துள்ள இலங்கை வங்கி கடன் திட்டத்தில் 47 இளைஞர் யுவதிகளுக்கு இதுவரை 21 மில்லியன் ரூபா கடனாக வழங்கப்பட்டுள்ளது.
இலங்கை வங்கியின் முன்னேற்றம் தொடர்பான அறிக்கையில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த கடன் மூலம் இளைஞர், யுவதிகள் ஆடை தொழில்துறை, கட்டட நிர்மாணம், தொழில்நுட்பம் புகைப்படத் துறை உள்ளிட்டவற்றில் தமது நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளனர் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சிறிய வர்த்தக துறையை அபிவிருத்தி செய்வதற்காக 330 கடன் திட்டங்கள் வகுக்கப்பட்டுள்ளன. வடக்கு, தெற்கு மற்றும் சப்கரமுவ மாகாணத்தை சேர்ந்த பெருமளவானோர் இந்த கடனை பெற முன்வந்துள்ளனர்.
Related posts:
ஹாலியில் பாரிய காட்டுத்தீ!
சமூகத் தொற்றாக மாறுகின்றதா கொரோனா - அச்சத்தில் தென்னிலங்கை மக்கள்!
நெடுந்தீவுக்கு படகில் சென்ற மீனவர்கள் இருவர் மாயம் - தேடும் பணி தீவிரம்!
|
|