இளைஞர் யுவதிகளுக்கு அரச முகாமைத்துவ உதவியாளர் தொழில் வாய்ப்பு!

Monday, November 14th, 2016

2878 இளைஞர் யுவதிகள் அரச முகாமைத்துவ உதவியாளர் சேவையில் புதிதாக அடுத்த வருடம் இணைத்துக் கொள்ளப்படவுள்ளதாகவும் இதற்கான வர்த்தமானி அறிவிப்பு அடுத்த மாதம் வெளியிடப்பட இருப்பதாகவும் அரச நிர்வாக மற்றும் முகாமைத்துவ அமைச்சின் இணைந்த சேவைகள் பணிப்பாளர் நாயகம் கே.வி.பி.எம்.ஜி.கமகே தெரிவித்துள்ளார்.

இவ்வருடத்தில் அரச முகாமைத்துவ உதவியாளர் சேவையில் மேலும் 1595 பேர் சேர்த்துக் கொள்ளப்பட உள்ளனர். இதற்கான நேர்முகப் பரீட்சை எதிர்வரும் 15ம் 16ம் 18ம் திகதிகளில் அமைச்சில் நடைபெறவுள்ளது.

2015ம் ஆண்டு ஏப்ரல் மாதத்தில் நடத்தப்பட்ட போட்டிப் பரீட்சையில் பெறப்பட்ட புள்ளிகளின் அடிப்படையில் இவர்கள் சேர்த்துக் கொள்ளப்படவுள்ளனர என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.நேர்முகப் பரீட்சைக்கு அழைக்கப்பட்டுள்ளோரின் பெயர் விபரங்கள் அமைச்சின் இணையத்தளத்தில் வெளியிடப்பட்டுள்ளன.

lo

Related posts: