“இளைஞர் நாடகத்தை ” சர்வதேச மேடைக்கு எடுத்துச் செல்ல வேண்டும் – அமைச்சர் நாமல் ராஜபக்ச உறுதி!

Monday, March 29th, 2021

இளைஞர் நாடக விழாவின் பல நாடகங்கள் நாடு முழுவதும் திரையிடப்பட்டு சர்வதேச கண்காட்சிகளுக்கு அனுப்பி வைக்கப்படும் என அமைச்சர் நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

கடந்த 25 ஆம் திகதி இளைஞர் மற்றும் விளையாட்டு அமைச்சு, தேசிய இளைஞர் சேவைகள் மன்றம் மற்றும் இலங்கை இளைஞர் கழக கூட்டமைப்பு ஆகியவை இணைந்து ஏற்பாடு செய்திருந்த 41 ஆவது தேசிய இளைஞர் நாடக விழாவில் விருந்தினராக கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இதன்போது மேலும் கருத்து தெரிவித்த நாமல் ராஜபக்ச – கொவிட் தொற்று காலப்பகுதியில் நாடகத்துறை வீழ்ச்சியடைந்திருக்கும் நேரத்தில், இளைஞர் நாடக விழாவை வலுவூட்ட தேசிய இளைஞர் சேவைகள் மன்றம் மூலம் கலைத்துறை தொடர்பான ஆலோசனைகளை வழங்குவதற்கும், மக்களின் இயல்பு வாழ்க்கையை மீள கட்டியெழுப்புவதற்கும் வாய்ப்பு கிடைத்திருந்தது மகிழ்ச்சியளிப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன் கலைத்துறையை சார்ந்த ஒருவரை பற்றி குறிப்பிடும் போதும் அவர் பற்றி கேள்விப்பட்டதும், பார்த்ததும் தோன்றுவது என்னவென்றால், அவருக்கு மேடை நாடகம் கலைஞரின் ஆரம்ப அடிப்படையாகும். மேடை புத்துயிர் பெற்றால், கலைத்துறைக்கு சிறந்த எதிர்காலம் உருவாகும்.

தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் மூலம் மாவட்ட அளவில் நாடகக் குழுக்களை அமைக்கும், ஆரம்பிப்பதிலும் நான் மகிழ்ச்சியடைகின்றேன். இந்த விழாவின் பல நாடகங்கள் நாடு முழுவதும் திரையிடப்பட்டு சர்வதேச கண்காட்சிகளுக்கு அனுப்பப்படும் என்றும் தெரிவித்துள்ளார்

இதேநேரம் இந்த ஆண்டு தேசிய இளைஞர் நாடக போட்டியின் இறுதி சுற்றுக்கு 07 சிங்கள மொழி நாடகங்கள், 12 சிங்கள குறுந்திரைப்படங்கள் மற்றும் 02 தமிழ் நாடகங்கள் தேர்வு செய்யப்பட்டிருந்தன. கொவிட் – 19 தொற்று நிலைமைக்கு மத்தியில் 16 நாடகங்கள், 96 சிங்கள சிறுகதைகள் மற்றும் 10 தமிழ் குறுநாடகங்கள் மாகாண மட்டத்தில் போட்டிகளுக்கு சமர்ப்பிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Related posts: