இளைஞர்களுக்கு புனர்வாழ்வு – தேசிய அதிகாரசபை அமைக்க அமைச்சரவை அனுமதி!

Thursday, February 7th, 2019

போதைப்பொருளுக்கு அடிமையானவர்களுக்கு புனர்வாழ்வளிப்பதற்கான தேசிய அதிகார சபை ஒன்றை உருவாக்குவதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.

இதுதொடர்பான அமைச்சரவை பத்திரம் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவினால் சமர்ப்பிக்கப்பட்டிருந்தது.

அத்துடன் போதைப்பொருளை அடையாளங்காணும் நவீன உபகரணங்களை இறக்குமதி செய்து பயன்படுத்துவதற்கு முன்வைக்கப்பட்ட யோசனைக்கும் அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

Related posts: