இளைஞர்களின் வீடமைப்புத் தேவையை நிறைவேற்ற விரைவில் நடவடிக்கை – ஜனாதிபதி கோட்டாபய அறிவிப்பு

Wednesday, November 18th, 2020

நாட்டின் சகல துறைகளிலுமுள்ள இளைஞர்களின் வீடமைப்புத் தேவையை நிறைவேற்ற விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும் என்று ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

இதற்காக 30 வருடங்களுக்குள் திரும்பி செலுத்தக் கூடிய வகையில் குறைந்த வட்டியுடன் கூடிய வீடமைப்பு கடனை வழங்குவதற்காக வர்த்தக வங்கிகளின் ஒத்துழைப்பும் பெற்றுக்கொள்ளப்படவுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

இதன்மூலம் கூடுதலான தொழில் வாய்ப்புக்கள் உருவாகும் என்றும் ஜனாதிபதி சுட்டிக்காட்டியுள்ளார்.

கொரோனா வைரஸ் தாக்கத்திற்கு வெற்றிகரமான முறையில் முகங்கொடுத்து சகல செயற்பாடுகளையும் வெற்றிகரமான முறையில் நடைமுறைப்படுத்த எதிர்பார்ப்பதாக ஜனாதிபதி மேலும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts: