இளம் தொழில் முயற்சியாளர்களுக்கு விசேட திட்டம்!

Wednesday, May 23rd, 2018

இளம் தொழில் முயற்சியாளர்களுக்கு இலங்கை வங்கி விசேட கடன் திட்டம் ஒன்றை வழங்க முன்வந்துள்ளது.

சிறிய அளவிலான வருமானத்தை ஈட்டித்தரும் தொழில் முயற்சி நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ள இளம் முயற்சியாளர்களுக்கு கடன் உதவி வழங்கப்படவுள்ளது.

இதற்காக துருனு திரிய எனும் கடன் திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. விண்ணப்பதாரர் டிசம்பர் மாதம் 31 ஆம் திகதியன்று 35 வயது அல்லது அதற்கு குறைந்தவராக இருத்தல் வேண்டும்.

இந்தக் கடன் திட்டத்தினை பெற்றுக் கொள்ள ஆர்வம் உள்ள இளம் தொழில் முயற்சியாளர்கள் கிராம உத்தியோகத்தர்களிடமோ அல்லது அருகில் உள்ள இலங்கை வங்கி கிளையில் மேலதிகதகவல்களை பெற்றுக்கொள்ள முடியும்.

Related posts: