இளநீர்,தேங்காய் விலை குடாநாட்டில் அதிகரிப்பு!

Tuesday, March 21st, 2017

யாழ்ப்பாணத்தில் தேங்காய் மற்றும் இளநீர் ஆகியவற்றின்  விலை சடுதியாக அதிகரித்து தேங்காய் ஒன்று 70 ரூபாய் தொடக்கம் 80 ரூபாவரை விற்பனை செய்யப்படுவதுடன், இளநீர் 120 ரூபாய் தொடக்கம் 150 ரூபாய் வரையில் விற்பனை செய்யப்படுகின்றது.

அத்துடன் போதுமானதாக இளநீர் கிடைப்பதில்லை எனவும் அவற்றை வெளிமாவட்டங்களிலிருந்து கொள்வனவு செய்து கொண்டு வருவதன் காரணமாக விலை அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதாகவும் வியாபாரிகள் கூறியுள்ளனர்.

மேலும், யாழ். குடாநாட்டில் மரக்கறிகளின் விலைகளில் கடும் சரிவு ஏற்பட்டுள்ளமையால் விவசாயிகள் மட்டுமன்றி வியாபாரிகளும் பாதிப்பினை எதிர்நோக்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது

Related posts: