இலவச கல்வி – பட்டதாரி மாணவர் ஒருவருக்கு ஆண்டுக்கு மதிப்பிடப்பட்ட அரச செலவு வெளியானது!

Wednesday, July 26th, 2023

பல்வேறு பட்டப்படிப்புகளில் இளங்கலை பட்டதாரிகளுக்கு ஆண்டுக்கு மதிப்பிடப்பட்ட செலவு நாடாளுமன்றத்தில் வெளியிடப்பட்டது.

இலங்கையில் உயர்கல்வி வாய்ப்புகளை விரிவுபடுத்துவதற்கு உரிய பரிந்துரைகளை வழங்குவதற்கான நாடாளுமன்ற விசேட குழுவின் அறிக்கையில் இந்த உண்மைகள் வெளிப்படுத்தப்பட்டுள்ளன.

அதன்படி, பல் மருத்துவ பீடத்தில் இளங்கலைப் பட்டதாரி ஒருவருக்கு ஆண்டுக்கு அதிகபட்ச தொகை. 17 இலட்சத்து 12 ஆயிரத்து 39 ரூபா ஒதுக்கப்படும், அதன்படி 5 வருட படிப்பு காலத்திற்கு ரூ. 85 இலட்சத்து 60 ஆயிரத்து 195 என மதிப்பிடப்பட்டுள்ளது.

இரண்டாவது அதிகபட்ச தொகை 15 இலட்சத்து 22 ஆயிரத்து 988 கால்நடை அறிவியல் பீடத்தில் பட்டதாரி பரீட்சார்த்திக்கு ஒதுக்கப்படும், அதன்படி, 05 வருட பாடநெறி காலத்திற்கு, 76 இலட்சத்து 14 ஆயிரத்து 940 என மதிப்பிடப்பட்டுள்ளது.

மேலும், மருத்துவப் பீடத்தில் இளங்கலைப் பட்டதாரிக்கு ஆண்டுக்கு 10 இலட்சத்து 10 ஆயிரத்து 452 ரூபா ஒதுக்கப்பட்டுள்ளது. அதன்படி 5 ஆண்டு படிப்புக்கு 50 இலட்நத்து 52 ஆயிரத்து 260 என மதிப்பிடப்பட்டுள்ளது.

இதேநேரம் இணை சுகாதார அறிவியல் பீடத்தில் இளங்கலைப் பட்டதாரிக்கு 7 இலட்சத்து 20 ஆயிரத்து 252 ரூபா வீதம்  அந்த நபரக்கு, 4 வருட பாடநெறியின் காலத்திற்கு, 28 இலட்சத்து 81 ஆயிரத்து 8 ரூபா என மதிப்பிடப்பட்டுள்ளது.

இது இவ்வாறிருக்க பொறியியல் பீடத்தில் இளங்கலை மாணவருக்கு வருடத்திற்கு 7 இலட்சத்து 05 ஆயிரத்து 231 ரூபா ஒதுக்கப்படுகிறது, மேலும் 4 ஆண்டு காலத்திற்கு 28 இலட்சத்து 20 ஆயிரத்து 924 ரூபா என மதிப்பிடப்பட்டுள்ளது.

இதற்கு மேலதிகமாக, விவசாய பீடத்தில் இளங்கலை மாணவருக்கு 6 இலட்சத்து 86 ஆயிரத்து 607 ரூபாவும் தகவல் தொழில்நுட்ப பீடத்தில் பட்டப்படிப்பு பரீட்சார்த்திக்கு.3 இலட்சத்து 62 ஆயிரத்து 994 ரூபாவும் சட்ட பீடத்தில் இளங்கலைப் பட்டதாரிக்கு வருடத்திற்கு.3 இலட்சத்து 12 ஆயிரத்து 460 ரூபாவும் இளங்கலை ஊடகம் மற்றும் நிகழ்த்துக் கலைப் பிரிவினருக்கு ஆண்டுக்கு 5 இலட்சத்து 20 ஆயிரத்து 393, ரூபா. மற்றும் 3 இலட்சத்து 52 ஆயிரத்து 475 ரூபா என்றும் மதிப்பிடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது

000

Related posts: