இலவச கல்வி தொடர்பில் ஜனாதிபதி!

Thursday, July 20th, 2017

நாட்டில் இலவச கல்வியை சக்தி மயப்படுத்தல் மற்றும் நாட்டின் இளைஞர் யுவதிகளுக்கு தொழிற் பயிற்சியினை வழங்க அரசாங்கம் நடவடிக்கை மேற்கொள்ளும் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

திறனபிவிருத்தி மற்றும் தொழிற்பயிற்சி அமைச்சின் கீழ் இடம்பெறும் சகல கல்வி நிறுவனங்களும் நிதி செலுத்துவதில் இருந்து விடுவித்தது தற்போதைய அரசாங்கமே எனவும் ஜனாதிபதி குறிப்பிட்டார்.

இதேவேளை, எதிர்வரும் மூன்று ஆண்டு காலப்பகுதியினில் சுமார் 4 கோடிக்கும் அதிகமான கடனை செலுத்த வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாக பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

ஜீ.எஸ்.பி பிளஸ் வரிச்சலுகை ஊடாக கிடைக்கப்பெறும் வர்த்தக வாய்ப்புகள் தொடர்பான தெளிவூட்டல் கருத்தரங்களில் கலந்து கொண்ட அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்குறித்த கடனை செலுத்துவதன் பொருட்டு அரசாங்கம் கடந்த இரண்டு வருடங்களால் செயற்பட்டு வந்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

 

Related posts: