இலவசக் காலணிகளைப் பெற மாணவர்களுக்கு வவுச்சர்!

Tuesday, November 28th, 2017

மாணவர்களுக்காக அரசாங்கத்தால் இலவசமாக வழங்கப்படும் காலணிகளுக்குப் பதிலாக 2018 ஆம் ஆண்டிலிருந்து காலணிகளைக் கொள்வனவு செய்வதற்கான வவுச்சர்கள் மாணவர்களுக்கு வழங்கப்படவுள்ளதாக கல்வித் திணைக்களம் தெரிவித்துள்ளது.

கல்வி அமைச்சர் அகிலவிராஜ் காரியவசம் வழங்கிய அறிவுறுத்தல்களுக்கு ஏற்ப அடுத்த வருடத்திலிருந்து மாணவர்களுக்கு இலவசக் காலணிகள் வழங்குவது நிறுத்தப்பட்டு அதற்குப் பதிலாக காலணிகளைக் கொள்வனவு செய்வதற்காக மாணவர்களுக்கு வவுச்சர்களை வழங்குவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சர் தகவல்களில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

2016 ஆம் ஆண்டிலும் நடப்பாண்டிலும் மாணவர்களுக்கு இலவசக் காலணிகள் வழங்குவதில் ஏற்பட்ட குறிப்பிட்ட சில பிரச்சினைகள் காரணமாகவே இவ்வாறு காலணிகளுக்குப் பதிலாக வவுச்சர்களை வழங்குவதற்கான திட்ட ஆலோசனையை அமைச்சர் அகிலவிராஜ் காரியவசம் அமைச்சரவைக்குத் தெரிவித்திருந்தார்.

Related posts: