இலவசக் கல்வியை பாதுகாக்க அரசாங்கம் அர்ப்பணிப்புடன் செயற்படுகின்றது – அமைச்சர் லக்ஷ்மன் கிரியெல்ல!

Thursday, April 27th, 2017

இலவசக் கல்வியை பாதுகாக்க அரசாங்கம் அர்ப்பணிப்புடன் செயற்படுவதாக உயர்கல்வி மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சரும் பாராளுமன்றச் சபைத் தலைவருமான லக்ஷ்மன் கிரியெல்ல தெரிவித்துள்ளார்.

ஐக்கிய தேசியக் கட்சி நாட்டில் இலவசக் கல்வி முறையை ஏற்படுத்தியது. இலவசக் கல்வியை அழிக்க இடமளிக்கப்பட மாட்டாது என்று நேற்று இடம்பெற்ற நிகழ்வு ஒன்றில் கலந்து கொண்டு அவர் வலியுறுத்தினார்.பல்கலைக்கழகங்களின் தராதரங்களினைப் பாதுகாக்க எதிர்வரும் 2 மாதங்களுக்குள் புதிய சட்டமூலம் அறிமுகப்படுத்தப்படும்.தனியார் மருத்துவ கல்லூரியை கடந்த அரசாங்கமே ஆரம்பித்தது. அன்று அதனை எதிர்க்காதவர்கள் இன்று தனியார் பல்கலைக்கழகங்களை எதிர்ப்பதாக அமைச்சர் சுட்டிக்காட்டினார்.

தனியார் மருத்துவ கல்லூரி பற்றி நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை ஏற்றுக்கொள்வது அவசியமாகும். அரசாங்கம் சகல பல்கலைக்கழகங்களுக்கும் சகல வசதிகளையும் வழங்கியிருப்பதாக அவர் கூறினார்.இந்நிகழ்வில் கலந்து கொண்டு அரசாங்கம் சட்டம், ஒழுங்கு என்பனவற்றுக்கு அமைய செயற்படுகிறது என சுகாதார போசாக்கு மற்றும் சுதேச வைத்தியத்துறை அமைச்சர் டொக்டர் ராஜித சேனாரத்ன கூறினார்.தனியார் மருத்துவ கல்லூரி பற்றி மருத்துவ பேரவை எவ்வாறு செயற்பட வேண்டும் என்பது பற்றி நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. இது தொடர்பாக சுகாதார துறையினர் ஜனாதிபதியுடன் இன்றும் பேச்சுவார்த்தை நடத்தவுள்ளனர் என்று குறிப்பிட்டார்.

நாட்டில் 6 ஆயிரம் வைத்தியர்களுக்கான வெற்றிடம் நிலவுகிறது. அரசாங்கம் வைத்தியசாலைகளை மேம்படுத்த கூடுதலான நிதியை செலவிடுவதாகவும் அமைச்சர் இதன்போது கூறினார்.தெற்காசியாவில் தனியார் மருத்துவக் கல்லூரி இல்லாத ஒரே நாடு இலங்கை என்றும் அமைச்சர் இதன்போது சுட்டிக்காட்டினார்.

மேலும் கல்வியின் தரத்தை பாதுகாக்க அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளதாக இந்த நிகழ்வில் கலந்து கொண்டு உயர்கல்வி இராஜாங்க அமைச்சர் மொஹான் லால் கிரேரு கருத்து வெளியிட்டார்.

Related posts: