இலண்டன் பயங்கரவாத தாக்குதல் – இலங்கை வைத்தியரக்கு பிரித்தானியா பாராட்டு!

Saturday, March 25th, 2017

பிரித்தானிய நாடாளுமன்றத்திற்கு அருகில் நேற்று முன்தினம் இடம்பெற்ற பயங்கரவாத தாக்குதலில் அந்நாடு அதிர்ச்சி அடைந்திருந்தது.

இந்த தாக்குதலில் ஐந்து பேர் உயிரிழந்திருந்தனர். பலர் காயங்களுக்கு உள்ளாகி இருந்தனர். எனினும் சம்பவம் இடம்பெற்ற உடன் காயமடைந்த நபர்களுக்கு சிகிக்சை வழங்குவதற்காக முதன் முதலாக இலங்கை பூர்வீகத்தை கொண்ட வைத்தியர் ஒருவர் உதவி செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

ஜேவிஸ் விஜேசூரிய என்ற இந்த இளம் வைத்தியர், அந்த சந்தர்ப்பத்தில் வெஸ்மினிஸ்ர் நாடாளுமன்றத்திற்கு அருகில் பயணித்துக் கொண்டிருந்துள்ளார்.

இந்த சந்தர்ப்பத்தில் மக்கள் உதவிக்காக கூச்சலிடும் சத்தத்தை கேட்ட வைத்தியர் உடனடியாக செயற்பட்டு நோயாளிகளை அழைத்து செல்வதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொள்ள முயற்சித்துள்ளார்.

பலர் அச்சத்துடன் உயிரை காப்பாற்ற ஓடிய சந்தர்ப்பத்தில் பாதிக்கப்பட்ட நபர்களை காப்பாற்ற வைத்தியர் மேற்கொண்ட நடவடிக்கை பெரிதாக பேசப்பட்டு வருகிறது. அவரின் செயற்பாட்டுக்கு பிரித்தானிய மக்கள் பாராட்டுகளையும் நன்றிகளையும் தெரிவித்துள்ளனர்

Related posts: