இலஞ்ச ஊழல் தவிர்ப்பு ஆணைக்குழுவின் பணிப்பாளர் இராஜினாமா?

எதிர்வரும் சில தினங்களில் இலஞ்ச ஊழல் மோசடி தவிர்ப்பு ஆணைக்குழுவின் பணிப்பாளர் நாயகம் தில்ருக்ஸி டயஸ் விக்ரமசிங்க பதவியை இராஜினாமா செய்யத் தீர்மானித்துள்ளார் என செய்திகள் தெரிவிக்கின்றன..
அண்மைக் காலமாக லஞ்ச ஊழல் மோசடி தவிர்ப்பு ஆணைக்குழு தொடர்பில் அரசியல் ரீதியாக செய்யப்பட்டு வரும் விமர்சனங்களின் காரணமாக பதவியை இராஜினாமா செய்யவுள்ளார்.இந்த விடயம் குறித்து பிரதமர் ரணில் விக்ரமசிங்கவிற்கு உத்தியோகப் பற்றற்ற ரீதியில் அறிவிக்கப்பட்டுள்ளதாக கொழும்பு ஊடகமொன்று தகவல் வெளியிட்டுள்ளது.
தில்ருக்ஸி டயஸ் விக்ரமசிங்கவை, பிரதமர் ரணில் விக்ரமசிங்கவே பதவியில் அமர்த்தினார் என குற்றம் சுமத்தப்பட்டிருந்தது.இந்த நிலையில் அண்மையில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன லஞ்ச ஊழல் மோசடி தவிர்ப்பு ஆணைக்குழுவின் நடவடிக்கைகளை கடுமையான விமர்சனம் செய்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
Related posts:
|
|