இலஞ்ச ஊழல் ஆணைக்குழு பணிப்பாளர் பதவி துறந்தார்?

இலஞ்ச ஊழல் தொடர்பில் விசாரணை செய்யும் ஆணைக்குழுவின் பணிப்பாளர் நாயகம் தில்ருக்ஷி டயஸ் விக்ரமசிங்க தனது பதவியிலிருந்து இராஜினாமா செய்துள்ளார்.இது குறித்தான தனது இராஜினாமா கடிதத்தை ஜனாதிபதி அனுப்பி வைத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
முன்னாள் பாதுகாப்பு செயலாளர் மற்றும் முன்னாள் முப்படை தளபதிகள் ஆகியோரை நீதிமன்றிற்கு அழைத்தமை தொடர்பில், கடந்த வாரம் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் தெரிவிக்கப்பட்ட கருத்துகள் தொடர்பில் ஊடகங்களில் பல்வேறு கருத்துகள் வெளியாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
CID, FCID, இலஞ்ச ஊழல் ஆணைக்குழு போன்றவை அரசியல் நிகழ்ச்சி நிரலுக்காக செயற்படுமானால் அவற்றுக்கெதிராக தீர்மானங்களை எடுக்க நேரிடும் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கடந்த வாரம் (12) தெரிவித்திருந்தார்.
குறித்த கருத்துகள் காரணமாகவே, அவர் இவ்வாறு இராஜினாமா செய்வதற்கு தீர்மானித்திருக்கலாம் என அரசியல் அவதானிகள் தெரிவிக்கின்றனர்.
Related posts:
|
|