இலஞ்சம் பெற்ற குற்றச்சாட்டில் இலங்கை அரச போக்குவரத்துச் சேவையின் வட பிராந்திய முகாமையாளர் கைது!

Wednesday, August 19th, 2020

இலங்கை அரச போக்குவரத்து  சபையின் வட பிராந்திய  முகாமையாளர் மன்னாரில் வைத்து இலஞ்சம் வாங்கிய நிலையில் கைது செய்யப்பட்டுள்ளார்.

இன்று புதன்கிழமை காலை இலஞ்ச ஊழல் ஆணைக்குழு அதிகாரிகள் குறித்த முகாமையாளரை கைது செய்துள்ளனர்.

முறைப்பாடு ஒன்றை சீர்செய்யும் வகையில் மன்னாரில் வைத்து பணம் பெற்றுக் கொள்ளும் சந்தர்ப்பத்தில் இலஞ்சம் வாங்கி குற்றச்சாட்டில் இலஞ்ச ஊழல் ஆணைக்குழு அதிகாரிகளினால் கைது செய்யப்பட்டுள்ளார்

தற்போது கைது செய்யப்பட்ட வட பிராந்திய முகாமையாளர் மன்னார் பொலிஸ் நிலையத்திற்கு அழைத்து வரப்பட்டு விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Related posts: