இலஞ்சம் அதிகாரி கைது!

Sunday, September 24th, 2017

இலஞ்சம் பெற்ற குற்றச்சாட்டில் கலால் திணைக்களத்தின் அதிகாரி ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

அளுத்கம கலால் திணைக்களத்தில் பணியாற்றும் அதிகாரி ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக இலஞ்ச ஊழல் குற்ற விசாரணை ஆணைக்குழு கூறியுள்ளது.

பேருவளை பிரதேசத்தில் இடம்பெற்றுவந்த கஞ்சா வியாபாரத்திற்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்காதிருப்பதற்கு குறித்த அதிகாரியினால் இலஞ்சம் பெறப்பட்டுள்ளதாக தெரிய வந்துள்ளது.

இதற்காக 50,000 ரூபா இலஞ்சம் கோரப்பட்டுள்ள நிலையில் 20,000 ரூபா இலஞ்சமாக குறித்த கஞ்சா வர்த்தகரினால் வழங்கப்பட்டுள்ளது.

மீதி 30,000 ரூபா பணத்தை பெறுவதற்காக சென்றபோது குறித்த கலால் அதிகாரி கைது செய்யப்பட்டதாக இலஞ்ச ஊழல் குற்ற விசாரணை ஆணைக்குழு கூறியுள்ளது.  மேலதிக விசாரணைகளின் பின்னர் களுத்துறை நீதவான் நீதிமன்றில் ஆஜர் செய்யப்பட்ட குறித்த அதிகாரியை எதிர்வரும் 28ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Related posts: