இலச்சினையில் பனையும் வீணையும் என இருந்தால் மட்டும் போதாது: பனை வளத்தையும் அதனை நம்பிவாழும் மக்களின் வாழ்வியலையும் மேம்படுத்த இலட்சியம் கொள்ள வேண்டும் – ஈ.பி.டிபியின் தேசிய அமைப்பாளர் கி.பி!

Monday, October 8th, 2018

வடக்கு மாகாணசபையின் இலச்சினை பனையும், வீணையும் என இருந்தால் மட்டும் போதாது. பனைவளத்தையும், அதனை நம்பிவாழும் மக்களின் வாழ்வியலையும் மேம்படுத்துகின்ற இலட்சியத்தையும் உருவாக்கவேண்டும்  என்பதே எனது  விருப்பமாகும்  என  ஈழ  மக்கள்  ஜனநாயகக்  கட்சியின் தேசிய அமைப்பாளர் பசபதி சீவரத்தினம் தெரிவித்துள்ளார்.

பனை அபிவிருத்தி சபையின் ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் தேசிய வீடமைப்பு அதிகாரசபை கட்டிடத்தில்; இடம் பெற்றது. இந்த நிகழ்வில் பிரதம அதிதியாக கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தள்ளார்.

மேலும் அவர் தெரிவிக்கையில் –

பனை வளத்தை நம்பி வாழ்கின்ற வறுமைக்குள்ளான மக்கள் நன்மை பெறும் வகையில் தற்போது அபிவிருத்தி நடவடிக்கைகள் இடம்பெறவில்லை என்பதைதான் பனை அபிவிருத்தி சபையின் தலைவராக இருந்தகாலத்தில் பெற்றுக்கொண்ட அனுபவங்களில் இருந்து உணரமுடிகிறது.

கடந்தகாலங்களில் பனை அபிவிருத்தி சபை நிர்வாகங்களில் பனைவளத்தை சார்ந்த, கஸ்டப்படும் மக்களுக்கு, இதனையே நம்பி வாழும் இதனை சார்ந்த மக்களுக்கு உத்தியோகங்கள் கிடைப்பதில்லை. பளை வளம் சம்பந்தமான அனுபவமற்றவர்களுக்கே பெரும்பாலும் உத்தியோகங்கள் வழங்கப்படுகின்றமை மிகவும் கவலைக்குரிய விடயமாகும். உத்தியோகங்களுக்கு நியமிக்கப்படுபவர்கள் பளைவளத்தை பாதுகாக்கவோ, அதனை அபிவிருத்தி செய்வதில் அக்கறை கொண்டவர்களாக இருக்கவில்லை.

பனை வளம் பாதுகாக்கப்படல் வேண்டும், விஸ்தரிக்கப்படல் வேண்டும். வடக்கு கிழக்குமாகாணத்தில் சுமார் ஒரு கோடியே 10 இலட்சம் பனைகள் உள்ளன என்று புள்ளிவிபரங்கள் தெரிவிக்கின்றன. நான் பனை அபிவிருத்திச் சபையின் தலைவராக இருந்த வேளை வருடமொன்றில் 20,000 பனைக்குமேல் தறிக்க அனுமதி வழங்கவில்லை. அதேவேளை இரண்டு இலட்சம் பனை மீள் நடுகை செய்யப்பட வேண்டும் என்பதில் மிகவும் அக்கறையுடன் செயற்பட்டேன்.

தற்போது எங்கு பார்த்தாலும் பனைகள் தறிக்கப்படுகின்றன. பொருளாதார கஸ்டம் கொண்டவர்களும் இதனைநம்பிவாழும் மக்களும், பனைதென்னைவள அபிவிருத்தி கூட்டுறவு சங்கங்களும் பனை வளம் பாதுகாக்கப்படல் வேண்டும் என்பதில் அக்கறை கொள்ளவேண்டும். பனை வளம் முக்கியம் என்பது பற்றி ஏனையவர்களுக்கு புரியவைக்க வேண்டும். உற்பத்தியாளர்களிடமிருந்து பனாட்டு ஒருகிலோ ஆயிரம் ரூபாவுக்கு கொள்வனவு செய்யப்படுகிறது.

ஒருகிலோ தரமானபனம் கற்கண்டு 3,500 ரூபா. விற்பனை செய்யப்படுகிறது குறைந்தது ரூபா 3,000 வுக்கு கொள்வனவு செய்வார்கள். மூன்று பனங்காயில் ஒருகிலோ பனங்களி உற்பத்தி செய்யலாம். பனைவளத்தை கொண்டவர்கள் பனம் பழத்தை பாதுகாப்பான முறையில் பிடுங்கிகளியை உற்பத்தி செய்யலாம். பழுத்து கீழேவிடும் பழங்களை பயன்படுத்தும் போது அதில் புழுக்கள் உள்ளனவா என்பதை அவதானிக்க வேண்டும். எனவே மரங்களில் காணப்படும் பழுத்த பழங்களை பாதுகாப்பான முறையில் பிடுங்கி பனங்களியை உற்பத்தி செய்யலாம். முழு நேரமாக இதனை தொழிலாக செய்யாவிட்டாலும் பகுதி நேரங்களில் இதனை மேற்கொள்வதன் மூலம் குடும்ப வருமானத்தை அதிகரித்துக் கொள்ளவாய்ப்பு உள்ளது.

எமது தலைவர் டக்ளஸ் தேவானந்தா பாராம் பரிய சிறுகைத்தொழில் அமைச்சராக இருந்தகாலத்தில் பனை அபிவிருத்தி சபைக்கென ஒரு ஆராய்ச்சி நிலையத்தை கைதடியில் உருவாக்கமுடிந்தது. தென்னை, தேயிலை, இறப்பர்N பான்றவற்றுக்கு ஆராய்ச் சிநிலையங்கள் இருப்பதுபோலவே பனைக்கும் ஒரு ஆராய்ச்சி நிலையமாக இது அமைந்துள்ளது.

ஆட்சி அதிகாரத்தில் இருந்த எந்த அரசாங்கமாக இருந்தாலும் அவர் அமைச்சராக இருந்தவேளை பனை அபிவிருத்தி சபையை கையலெடுத்து அதன் வளர்ச்சிக்காக பாடுபட்டவர். இதனை நம்பி வாழும் மக்களின் எதிர்காலநலனை கருத்திற்கொண்டும், பனைவளத்தை பாதுகாக்கும் நோக்குடனும், பனை ஆராய்ச்சி நிலையத்தின் ஊடாக புதிய பனைசார்ந்த தரமான உற்பத்தி பொருட்களை உற்பத்தி செய்வதற்கான ஆராய்ச்சிகளை மேற்கொள்வதற்கான நடவடிக்கைiயாகவே இதனை முன்னெடுத்தார் என்பதை இங்கு குறிப்பிட விரும்புகின்றேன். இதனை மக்களும் புரிந்து கொள்ளவேண்டும.;

இதுபோல் எமது காலத்தில் அபிவிருத்தித் திட்டங்களுக்கு அரசாங்கத்தினால் வழங்கப்படுகின்ற திட்டங்களை கொண்டு தும்பு உற்பத்திக்கென பளையில் பனை, தென்னைவள கூட்டுறவு சங்கத்துக்கு தும்பு உற்பத்தி செய்வதற்குரிய, இயந்திர உபகரணங்கள், இயங்கு வதற்கான கட்டிடம், உற்பத்தி செய்பவர்களுக்கான பயிற்சிகள், அப்பொருட்களை உரியவர்களிடமிருந்து கொள்வனவு செய்து கொண்டு செல்வதற்கான வாகனவசதிகள் எல்லாம் செய்து கொடுத்த போதிலும் உரியவாறு அதுபயன் படுத்தப்படவில்லை.

தற்போது அது இயங்காமல் முடக்கப்பட்டமைக்கான முழு பொறுப்பையும் பனை தென்னை வள கூட்டுறவு சங்கமேஏற்றுக்கொள்ளவேண்டும். இது போன்றமக்களுக்கானபலஅபிவிருத்தித் திட்டங்களைமுன்னெடுத்தபோதும் அதுநடைமுறைப்படுத்தாமல் இருப்பதுமிகவும் வேதனைதரும் விடயமாகும்.

சர்வதேசரீதியாகவும், உள்ளுரிலும் சந்தை வாய்ப்புக்களை பெற்று உற்பத்தியாளர்களை ஊக்குவித்து பனைவளத்தை அதிகரிக்க வேண்டும். இதற்கு பனை கூட்டுறவு சங்கங்களும், பனை அபிவிருத்தி சபையும் இணைந்து செயற்பட வேண்டும். இத்தகைய பொறுப்பினை பனைவள கூட்டுறவு சங்கங்களே முன்னெடுக்க வேண்டும்.

அறிவியலோடு பனைவளத்தின் பாராம்பரியத்தையும் இணைத்து செயற்படுத்தவேண்டும். இதற்குபனை அபிவிருத்திக் குழுக்களின் நடவடிக்கை மிக அவசியம். சிலநிர்வாகங்களை நம்பிக்கைக் கொண்ட பனைவளத்தின் மீது அக்கறைகொண்ட, பாதுகாக்கும் நோக்கம் கொண்டவர்களிடம் ஒப்படைக்கவேண்டும். அரசியல் நோக்கங்களால் செயற்படாது முடங்கிக் கிடக்கும் செயற்பாடுகள் மீண்டும் செயற்படுவதற்கான செயற்திட்டங்களை சங்கங்கள் மேற்கொள்ளவேண்டும் என்றார்.

அபிருத்திக் குழுவின் இணைத் தலைவர்களான வடக்கு மாகாண கூட்டுறவு அபிவிருத்தி ஆணையாளர் வாகீசன், சபையின் பொது முகாமையாளர் லோகநாதன், தலைமையில் இடம்பெற்ற இக் கூட்டத்தில் முன்னாள் பனை அபிவிருத்தி சபை தலைவர்களான பசுபதி சீவரத்தினம், கணபதிநடராசா ஆகியோருடன் வடக்கின் ஐந்து மாவட்டங்களில் இருந்து கூட்டுறவு அபிவிருத்தி உதவி ஆணையாளர்கள், பனை அபிவிருத்தி சபை உத்தியோகத்தர்கள், கூட்டுறவு உத்தியோகத்தர்கள், பனை, தென்னைவள கூட்டுறவு அபிவிருத்தி சங்கத் தலைவர்கள், பொதுமுகாமையாளர்கள், பனைசார் உற்பத்தி சங்க உறுப்பினர்கள் எனபலர் கலந்துகொண்டமை குறிப்பிடத்தக்கது.

Related posts: