இலங்கை 22 பில்லியன் டொலர் கடன் – ஆசிய அபிவிருத்தி வங்கி!
Friday, April 13th, 2018
இலங்கையின் பொருளாதார அபிவிருத்தியானது, நாட்டின் அரசியல் சூழ்நிலைகள் மற்றும் விவசாய உற்பத்திகளில் தங்கி இருப்பதாக ஆசிய அபிவிருத்தி வங்கி தெரிவித்துள்ளது
அத்துடன் இந்த வருடம் இலங்கையின் பொருளாதார வளர்ச்சி வேகம் 4.2 சதவீதமாகவும், அடுத்த ஆண்டு அது 4.8 சதவீதமாகவும் நிலவும் என்றும் எதர்வு கூறியுள்ளது.
காலநிலை விவசாய செயற்பாடுகளில் மிகப்பெரும் தாக்கத்தை ஏற்புடுத்தும் என்தால், அது அரசாங்கத்துக்கு சவாலான விடயமாக அமையவுள்ளது.மேலும் 2018ம் ஆண்டு முதல் 2024ம் ஆண்டு வரையில் இலங்கை 22 பில்லியன் டொலர்களுக்கான கடன்களை திருப்பி செலுத்த வேண்டியுள்ளது.
அதில் அடுத்த ஆண்டு 4.2 பில்லியன் டொலர்கள் திருப்பிச் செலுத்தப்பட வேண்டும்.இதுவும் அரசாங்கத்துக்கு பெரிய சவாலாக அமையும் என்று ஆசிய அபிவிருத்தி வங்கியின் 2018ம் ஆண்டுக்கான அறிக்கை ஒன்றில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
Related posts:
|
|